சரக்கு முனையங்கள் மற்றும் சரக்கு கையாளும் பூங்காக்களை அமைப்பதில் உலகளவில் முன்னணி நிறுவனமான ஹபக் லாய்டு நிறுவனத்துடன் 2500 கோடி ரூபாய் முதலீட்டில், 1000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் தூத்துக்குடி மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தளவாட வசதிகள் அமைத்திட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ அவர்களை, ரோக்கா நிறுவனத்தின்‌ சர்வதேச இயக்குநர்‌ Mr.Carlos Velazquez மற்றும்‌ இந்திய இயக்குநர்‌ நிர்மல்‌ குமார்‌ ஆகியோர்‌, பெருந்துறையில்‌ புதிய குழாய்கள்‌ மற்றும்‌ இணைப்புகளை உற்பத்தி செய்யும்‌ தொழிற்சாலை நிறுவிடவும்‌, இராணிப்பேட்டையிலும்‌ பெருந்துறையிலும்‌ செயல்பட்டு வரும்‌ தொழிற்சாலைகளை விரிவாக்கம்‌ செய்வது தொடர்பாகவும்‌ சந்தித்துப்‌ பேசினார்கள்

இச்சந்திப்பின்போது, தொழில்‌, முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும்‌ வர்த்தகத்‌ துறை அமைச்சர்‌ டி.ஆர்‌.பி.ராஜா, ‘Guidance’ நிறுவனத்தின்‌ மேலாண்மை இயக்குநர்‌ மற்றும்‌ தலைமைச்‌ செயல்‌ அலுவலர்‌ வே.விஷ்ணு ஆக்சியானா நிறுவனத்தின்‌ உயர்‌ அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

உங்களைத் தேடி உங்கள் ஊரில்

முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்த உங்களைத் தேடி உங்கள் ஊரில்என்ற புதிய திட்டம் நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது.

ஸ்பெய்ன் வந்தடைந்தேன்! ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக ஐரோப்பியப் பயணம்!

தூதர் தினேஷ் பட்நாயக்அவர்கள், தூதரக அதிகாரிகளுடன் சிறப்பான வரவேற்பை அளித்தார். இன்று மாலை ஸ்பெய்ன் நாட்டின் தொழில் அமைப்புகள் மற்றும் அந்நாட்டில் செயல்படும் பெரும் தொழில் நிறுவனங்களைச் சந்திக்கிறேன். தமிழ்நாட்டில் நிலவும் வாய்ப்புகள் மற்றும் இளைஞர் வளத்தை எடுத்துக்கூறி முதலீடுகளை ஈர்க்கவுள்ளேன்.

சென்னை, காமராசர்‌ சாலையில்‌ நடைபெற்ற குடியரசு நாள்‌ விழாவில்‌, தமிழ்நாடு ஆளுநர்‌ ஆர்‌.என்‌.ரவி தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ ஆகியோர்‌ பல்வேறு துறைகளின்‌ சார்பில்‌ அரசின்‌ திட்டங்களை விளக்கி அணிவகுத்து வந்த அலங்கார ஊர்திகளின்‌ அணிவகுப்பினை பார்வையிட்டார்கள்

இந்த நிகழ்வின்போது, சட்டப்பேரவைத்‌ தலைவர்‌ மு.அப்பாவு, அமைச்சர்‌ பெருமக்கள்‌, மாண்புமிகு சட்டப்பேரவை துணைத்‌ தலைவர்‌ கு. பிச்சாண்டி, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்‌, தலைமைச்‌ செயலாளர்‌ சிவ்‌ தாஸ்‌ மீனா அரசு உயர்‌ அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌

சென்னை, காமராசர்‌ சாலையில்‌ நடைபெற்ற குடியரசு நாள்‌ விழாவில்‌, தமிழ்நாடு ஆளுநர்‌ ஆர்‌.என்‌.ரவி தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ ஆகியோர்‌ பள்ளி மற்றும்‌ கல்லூரி மாணவ, மாணவியர்களின்‌ ஆடல்‌ பாடல்‌ கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார்கள்

இந்த நிகழ்வின்போது, சட்டப்பேரவைத்‌ தலைவர்‌ மு.அப்பாவு, அமைச்சர்‌ பெருமக்கள்‌, சட்டப்பேரவை துணைத்‌ தலைவர்‌ கு.பிச்சாண்டி, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்‌, தலைமைச்‌ செயலாளர்‌ சிவ்‌ தாஸ்‌ மீனா மற்றும்‌ அரசு உயர்‌ அலுவலர்கள்‌ உடனிருந்தனர்

சென்னை, காமராசர்‌ சாலையில்‌ நடைபெற்ற குடியரசு நாள்‌ விழாவில்‌, தமிழ்நாடு ஆளுநர்‌ ஆர்‌.என்‌.ரவி தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ ஆகியோர்‌ பல்வேறு துறைகளின்‌ சார்பில்‌ அரசின்‌ திட்டங்களை விளக்கி அணிவகுத்து வந்த அலங்கார ஊர்திகளின்‌ அணிவகுப்பினை பார்வையிட்டார்கள்

இந்த நிகழ்வின்போது, சட்டப்பேரவைத்‌ தலைவர்‌ மு. அப்பாவு, அமைச்சர்‌ பெருமக்கள்‌, சட்டப்பேரவை துணைத்‌ தலைவர்‌ கு.பிச்சாண்டி, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்‌, தலைமைச்‌ செயலாளர்‌ சிவ்‌ தாஸ்‌ மீனா மற்றும்‌ அரசு உயர்‌ அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌

தமிழ்நாடு ஆளுநர்‌ ஆர்‌.என்‌.ரவி சென்னை, காமராசர்‌ சாலையில்‌ நடைபெற்ற குடியரசு நாள்‌ விழாவில்‌, தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க. ஸ்டாலின்‌ முன்னிலையில்‌ தேசியக்‌ கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்‌. உடன்‌ தலைமைச்‌ செயலாளர்‌ சிவ்‌ தாஸ்‌ மீனா மற்றும்‌ அரசு உயர்‌ அலுவலர்கள்‌ உள்ளனர்‌