தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசின் 2024-2025ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்பாக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சந்தித்து வாழ்த்து பெற்றார்

உடன் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, நிதித்துறை முதன்மைச் செயலாளர் த.உதயச்சந்திரன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்
மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சிப் பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் செ.பீட்டர் அந்தோணிசாமி, தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படைப் பணியாளர்கள் சங்கம், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழ் மாநில அரசுப் பணியாளர் சங்கம், தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்கம், தமிழ்நாடு மாநில மாநகராட்சி அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு, தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்கம், தமிழ்நாடு-தேசிய ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படைப் பணியாளர்கள் சங்கம், தமிழக பள்ளிக்கல்வி ஆசிரியர் கூட்டணி மற்றும் அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நிர்வாகிகள் சந்தித்தனர்
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தமிழ்நாடு அரசின் 2024-2025ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் சந்தித்து வாழ்த்துப் பெற்று, பேரவைக்குள் சென்றார்
காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்…
2024-25 ம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு

100 ஆண்டுகளில் பேரவையில் தாக்கல் செய்த பட்ஜெட் தமிழர்களின் வாழ்வை உயர்த்தியது. நாட்டிலேயே 2வது பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது-பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு. சிலப்பதிகாரம், மணிமேகலை காப்பியங்களை 25 இந்திய மற்றும் உலக மொழிகளில் மொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு. கீழடி, வெம்பக்கோட்டை, உள்ளிட்ட 8 இடங்களில் தொல்லியல்துறை பணிகள் மேற்கொள்ளப்படும்; ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு. அகழ்வாராய்ச்சிக்கு என நாட்டிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்திற்கு ரூ.500கோடி […]
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து, சென்னையில் நடைபெற்ற 6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் 2023 நிறைவு விழாவில் ஒட்டுமொத்த தொடரில் இரண்டாமிடம் பிடித்த தமிழ்நாடு அணிக்கு வழங்கப்பட்ட கோப்பையை காண்பித்து வாழ்த்துப் பெற்றார்

இந்நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
“இமாச்சல பிரதேசத்தில் நடந்த கார் விபத்தில் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்;

எந்தவொரு தந்தையும் எதிர்கொள்ளக் கூடாத, எதிர்கொள்ள இயலாத துயரம் இது. மகனை இழந்து தவிக்கும் சகோதரர் சைதை துரைசாமிக்கு இத்துயர்மிகு நேரத்தில் எனது ஆறுதலையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக ஸ்பெயின் நாட்டிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டு தாயகம் திரும்பிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை விமான நிலையத்தில், நீர்வளத்துறை அமைச்சர் திரு. துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தலைமைச் செயலாளர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக ஸ்பெயின் நாட்டிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டு தாயகம் திரும்பிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்
ஸ்பெயின் நாட்டிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டு தமிழ்நாட்டிற்கு ரூ.3440 கோடி புதிய தொழில் முதலீடுகள் ஈர்ப்பு

சென்னை திரும்பிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது தகவல்