பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசனுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் பொறுப்பு!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்தியா.

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ராஞ்சியில் நடைபெற்ற 4ஆவது டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி. இங்கிலாந்து நிர்ணயித்த 192 ரன்கள் இலக்கை 5 விக்கெட்டுகளை இழந்து கடந்தது
மக்களவைத் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட தமிழ்நாடு வருகிறது துணை ராணுவம்;

200 கம்பெனி துணை ராணுவத்தினர் மார்ச் முதல் வாரத்தில் தமிழ்நாட்டிற்கு வருகை தர உள்ளனர்; கடந்த தேர்தலில் 160 கம்பெனி துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்”
மக்களைச் சந்திக்கிறார் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி, சரியாக, மதியம் 2:10 மணிக்கு பொதுக்கூட்ட மேடைக்கு வருகிறார். ஹெலிபேடில் இருந்து மேடை வரை ஒரு கி.மீ., துாரம் மெட்டல் ரோடு அமைக்கப்பட்டு, அதன் மேல் ‘மேட்’ விரித்துள்ளனர். திறந்தவெளி வாகனம் மூலம் தொண்டர்களை பார்த்த படி, பிரதமர் வரும் வகையில் பிரத்யேக நடைபாதையாக இது அமைக்கப்பட்டுள்ளது. இருபுறமும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அமர்ந்திருப்பர். இவ்வாறு பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் அமைக்கப்படுவது இதுவே முதன்முறை என்கின்றனர். 50 பெரிய திரைகளுடன் கூடிய எல்.இ.டி., ‘டிவி’க்கள் […]
நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில்

இரண்டு நாட்கள் நடத்தப்படும் தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு தொடக்க விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் படைப்புசார் வல்லுநர்கள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். உடன் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ்குமார் ஆகியோர் உள்ளனர்
சென்னை மெரினா கடற்கரையில், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் நினைவிடம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவிடம் திறப்பு விழா தொடர்பாக, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பதில் !
குலசேகரப்பட்டிணத்தில் வரும் 28ல் நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்கிறார்

தூத்துக்குடி, குலசேகரப்பட்டிணத்தில் ராக்கெட் ஏவுதளம் அடிக்கல் நாட்டு விழா வரும் 28இல் நடைபெறகிறது.
சட்டமன்றப் பேரவை தலைவர் மு.அப்பாவு அவர்கள் தலைமையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், உலகத் தாய்மொழி நாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் பெருமக்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரால் உலக தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடம் வரும் 26ஆம் தேதி திறப்பு

கருணாநிதி நினைவிடத்தை திறந்து வைக்க உள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி செலவில் கருணாநிதி நினைவிடம் அமைப்பு.
பிஜேபியின் சூழ்ச்சித் தந்திரங்களுக்கு ஒரு எச்சரிக்கையை அனுப்புகிறது உச்சநீதிமன்றம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: 2024 பொதுத் தேர்தல்களுக்கு முன்னதாக, பிஜேபியின் சூழ்ச்சித் தந்திரங்களுக்கு ஒரு எச்சரிக்கையை உச்சநீதிமன்றம் அனுப்புகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சண்டிகர் மேயர் தேர்தலில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நீதி மற்றும் சட்டத்தின் ஆட்சியின் கலங்கரை விளக்கமாகும்.சட்டப்பிரிவு 142-ன் கீழ் அரிதான அதிகாரத்தைப் பயன்படுத்துவதன் மூலம், நீதிமன்றம் நியாயத்தை நிலைநிறுத்தியது மட்டுமல்லாமல், தலைமை அதிகாரியால் பொறிக்கப்பட்ட தேர்தல் முறைகேட்டையும் தீர்க்கமாக ஒதுக்கியுள்ளது.