தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ அவர்களை இன்று (01.3.2024) அவரது 71-வது பிறந்தநாளையொட்டி, சென்னை, அண்ணா அறிவாலயத்தில்‌, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ பொதுச்‌ செயலாளரும்‌, நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ, தலைமைக்‌ கழக செயலாளர்‌ துரை வையாபுரி. அவைத்‌ தலைவர்‌ அர்ஜுன்‌ ராஜ்‌, துணை பொதுச்‌ செயலாளர்‌ மல்லை சத்யா ஆகியோர்‌ சந்தித்து பிறந்தநாள்‌ வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ தனது 71-வது பிறந்தநாளையொட்டி சி.ஐ.டி. காலனி இல்லத்தில்‌ முத்தமிழறிஞர்‌ கலைஞர்‌ அவர்களின்‌ திருவுருவப்‌ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்

உடன்‌, முத்தமிழறிஞர்‌ கலைஞர்‌ அவர்களின்‌ துணைவியார்‌ ராஜாத்தி அம்மாள்‌, நாடாளுமன்ற உறுப்பினர்‌ கனிமொழி மற்றும்‌ அவரது கணவர்‌ அரவிந்தன்‌ ஆகியோர்‌ உள்ளனர்‌.

தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ இன்று (1.3.2024) தனது 71-வது பிறந்தநாளையொட்டி சென்னை, மெரினா கடற்கரையில்‌ அமைந்துள்ள பேரறிஞர்‌ அண்ணா அவர்களின்‌ நினைவிடத்தில்‌ மலர்தூவி மரியாதை செலுத்தினார்

உடன்‌ நீர்வளத்துறை அமைச்சர்‌ துரைமுருகன்‌, மாண்புமிகு அமைச்சர்‌ பெருமக்கள்‌, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்‌ உள்ளனர்‌.

தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ இன்று (1.3.2024) தனது 71-வது பிறந்தநாளையொட்டி சென்னை, மெரினா கடற்கரையில்‌ அமைந்துள்ள முத்தமிழறிஞர்‌ கலைஞர்‌ அவர்களின்‌ நினைவிடத்தில்‌ மலர்தூவி மரியாதை செலுத்தினார்

உடன்‌ நீர்வளத்துறை அமைச்சர்‌ துரைமுருகன்‌, அமைச்சர்‌ பெருமக்கள்‌, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்‌ உள்ளனர்‌.

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள்: கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடும் தமிழக முதல்வர் ஸ்டாலின், மெரீனா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று தனது 71வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், இன்று காலை […]

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

இன்று 71வது பிறந்தநாளை கொண்டாடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன் -பிரதமர் மோடி.