தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோயமுத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கான வழங்கு நலத்திட்டங்கள் …

பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் நடக்கும் பொதுமக்களுக்கான நலத்திட்டங்கள் விவரங்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலினால் திறந்து வைக்கப்படும் பணிகள் விவரங்கள் கோயமுத்தூர் – 65 பணிகள் – 240.76 கோடி நீலகிரி – 43 பணிகள் – 27.13 கோடி ஈரொடு – 86 பணிகள் – 122 கோடி திருப்பூர் – 79 பணிகள் – 169 கோடி மொத்தமாக 273 பணிகள் – 560.05 கோடி அடிக்கல் நாட்டும் நலத்திட்ட பணிகள் விவரங்கள் கோயமுத்தூர் […]
முதலமைச்சரை வரவேற்க தனியார் பள்ளி வாகனங்களா..??

தமிழக முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்கள் இன்று பொள்ளாச்சி செல்லவிருப்பதால், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தனியார் பள்ளிகளில் இருந்தும், பள்ளி வாகனங்களை, முதலமைச்சர் வருகைக்காகப் பயன்படுத்த வற்புறுத்திப் பெற்றுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. திமுக அரசின் இந்த அதிகார துஷ்பிரயோகத்தால், மாணவர்கள் பள்ளிக்கு வர போதுமான வாகனங்கள் இல்லாமல், பல பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. பள்ளியிறுதிப் பொதுத்தேர்வுகள் நடைபெறும் இந்த நேரத்தில், தங்கள் விளம்பர அரசியலுக்காக, மாணவர்கள் பயணம் செய்யும் பள்ளி வாகனங்களைப் பிடுங்கிக் கொள்ளும் […]
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (9.3.2024) சென்னை, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு

கலைஞர் தமிழ் ஆய்வு இருக்கை சார்பில் கலைஞர் தமிழ் குறித்து தயாரிக்கப்பட்ட 100 நூல்களை வெளியிட்டு, நூலாசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்து, அவர்களுடன் முதலமைச்சர் அவர்கள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினுடன், வி.சி.க.தலைவர் திருமாவளவன் எம்.பி. சந்திப்பு

தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழு, அறிவாலயத்திற்கு பேச்சு நடந்த வரும்படி அழைத்த நிலையில் திருமாவளவன் தனியாக ஸ்டாலினை சந்தித்திருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
“வரும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு சமத்துவ மக்கள் கழகம் ஆதரவு”

-சென்னையில் சமக நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன் பேட்டி
திமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வரும் ஆலோசனையில் துரைமுருகன், டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்பு. ஏற்கனவே 4 கட்சிகளுடன் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் முடிந்துள்ளது. காங்கிரஸ், விசிக, மதிமுக உடன் தொகுதிப் பங்கீடு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகர திமுக சார்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் திருத்தங்கல்லில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட பிரபல திரைப்பட நடிகர் போஸ் வெங்கட் பேசுகையில், ‘‘ஒன்றிய பாஜ ஆட்சியில் பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு ஏழை மக்களை பெரிதும் பாதித்துள்ளது. கலவரத்தை தூண்டி அதன் மூலம் அரசியல் ஆதாயம் பெற்றவர் பிரதமர் நரேந்திரமோடி. பாஜவினர் செல்போன் மூலம் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர்.பிரதமர் மோடி கொடுத்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றி தர மாட்டார். வரும் நாடாளுமன்ற […]
சிட்லபாக்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது

மண்டலகுழு தலைவர் ஜெயபிரதீப்சந்திரன், மாமன்ற உறுப்பினர் சி.ஜெகன், பரிமளா சிட்டிபாபு, இ.மனோகரன், பா.பிரதாப், ஆர்.கே.புரம் சிவா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 71-வது பிறந்தநாளையொட்டி கோபாலபுரம் இல்லத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். .
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (01.3.2024) அவரது 71-வது பிறந்தநாளையொட்டி, சென்னை, அண்ணா அறிவாலயத்தில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ, தலைமைக் கழக செயலாளர் துரை வையாபுரி. அவைத் தலைவர் அர்ஜுன் ராஜ், துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா ஆகியோர் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.