இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லி செல்ல இருந்த தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது

ஏற்கனவே கடைசி கட்ட தேர்தலில் மேற்கு வங்கத்தில் சில தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுவதால் கூட்டத்தில் கலந்து கொள்ள வர முடியாது என மமதா பானர்ஜி கூறி இருந்தார்

மாணவியின் கோரிக்கையை நிறைவேற்றிய முதலமைச்சர்:

திருவாரூர்: வீட்டில் மின்சாரம் இன்றி அரசுப் பள்ளியில் படித்து 10ம் வகுப்பில் 492/500 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் 2வது இடத்தை பிடித்த மாணவி துர்காதேவி வீட்டிற்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இணைப்பு வழங்க உத்தரவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாணவி நன்றி. 12ம் வகுப்பில் மாநிலத்திலேயே முதலிடம் பெற்று மருத்துவராவதே தனது லட்சியம் எனவும் மாணவி துர்காதேவி தெரிவித்துள்ளார்.