முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று வெளியேற்றப்பட்ட எதிர்க்கட்சியினர் அனைவரும் மீண்டும் பேரவைக்குள் வர சட்டப்பேரவை தலைவர் அப்பாவு உத்தரவு
கள்ளச்சாராய மரணத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்

ஆட்சி, அதிகாரம் மட்டுமே முதல்வர் ஸ்டாலினுக்கு முக்கியம்; மக்கள் மீது அக்கறை இல்லை – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுக எம்.எல்.ஏ. செந்தில்குமார் பலமுறை எஸ்.பி.யிடம் விஷ சாராய விற்பனை குறித்து புகார் தெரிவித்துள்ளார். கஞ்சா, விஷச்சாராய விற்பனை இப்பகுதியில் அதிகளவில் புழக்கத்தில் உள்ளது; புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் இல்லை- ஈ.பி.எஸ்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில்,

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை தலைமைச் செயலகத்தில், சென்னையிலுள்ள ஆஸ்திரேலியா நாட்டுத் தூதர் சிலாய் சாக்கி (Ms. Silai Zaki) சந்தித்துப் பேசினார். உடன் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, தூதரகத்தின் மேலாண்மைஅலுவலர் ஓஸ்நட் ஓரன் (Ms Osnat Oren), ஆஸ்திரேலியா வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஆணையர் அப்துல் எக்ராம் மற்றும் அரசு உயர்அலுவலர்கள் உள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில்,

தொல்லியல் துறை சார்பில் 2022&2023 ஆம் ஆண்டு தருமபுரி மாவட்டம், பெரும்பாலை என்னும் தளங்களில் மேற்கொண்ட அகழாய்வின் அறிக்கை மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 138 கல்வெட்டுகளில் விளக்க உரைகள் அடங்கிய தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் தொகுதி – XXVIII & ஆகிய இரண்டு நூல்களை வெளியிட்டார். இந்தநிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், நிதி, மனிதவள மேலாண்மை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், தலைமைச் […]
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில்

இலக்கியத்தின் மூலமாக தலித் மக்களின் குரலாக ஒலித்து, சமூக தொண்டாற்றி வரும் ஃபாஸ்டினா சூசைராஜ் (ஏ) பாமா அவர்களுக்கு 2024-ஆம் ஆண்டிற்கான ஔவையார் விருதினை வழங்கிச் சிறப்பித்தார்கள். இந்நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை செயலாளர் ஜெயஸ்ரீ […]
டெல்லி விமான நிலையத்தில் தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் ஆந்திர முதல்வராக பொறுப்பேற்க உள்ள சந்திரபாபு நாயுடுவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 101-ஆவது பிறந்த நாளையொட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின்

சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வின்போது, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், வாரியத் தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 101-ஆவது பிறந்த நாளையொட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சிஐடி காலனியில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வின்போது, அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, ராஜாத்தி அம்மாள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 101-ஆவது பிறந்த நாளையொட்டி

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 101-ஆவது பிறந்த நாளையொட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருச்சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வின்போது, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், வாரியத் தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்
என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் சஸ்பென்ட் ரத்து..

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு சஸ்பென்ட் உத்தரவை ரத்து செய்ததாக தகவல்