திமுக ஆட்சிக்கு வராது…
“தமிழகத்தில் இனி எப்போதும் திமுக ஆட்சிக்கு வராது; இந்த தேர்தல்தான் திமுகவிற்கு இறுதித்தேர்தல்” “2021 தேர்தல் வாக்குறுதிகளில் நான்கில் ஒரு பங்கை கூட திமுக நிறைவேற்றவில்லை” – அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி.
ஆளுநர் ஆர். என்.ரவி தேசிய கொடியை ஏற்றினார்
77ஆவது குடியரசு தினவிழாவையொட்டி சென்னையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடி ஏற்றி வைத்தார். குடியரசு தின விழாவுக்கு வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை வரவேற்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின். குடியரசு தினவிழாவில் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. குடியரசு தினத்தையொட்டி பல்வேறு பிரிவுகளில் பதக்கங்கள், விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
நிலைமை மோசமாகும் முன் உடனடியாக கைவிட பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
துணை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வை கட்டாயமாகும் நடவடிக்கையை துணை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய ஆணையம் (NCAHP) எடுத்துள்ளது. இந்த நடவடிக்கையை உடனே கைவிட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.அதில் அவசரமான மற்றும் தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவு என சாடியுள்ளார். நீட் தேர்வு எனும் தவறான நடைமுறையை துணை மருத்துவப் படிப்புகளுக்கும் விரிவுபடுத்துவது நிலைமையை மேலும் மோசமாக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். எம்பிபிஎஸ் படிப்பிற்கு நீட் தேர்வை தமிழ்நாடு தொடர்ந்து எதிர்த்து வரும் […]
நாங்கள்தான் மீண்டும் வருவோம்! மீண்டும் வெல்வோம்!! மீண்டும் 2.0 ஆட்சி!!! – முதல்வர் ஸ்டாலின் பேச்சு
திராவிட மாடல் ஆட்சியின் 5 ஆண்டுகால உழைப்பையும் வளர்ச்சியையும் பார்த்து, அடுத்த 5 ஆண்டுகளுக்கும் திராவிட மாடல் ஆட்சிதான் தொடர வேண்டுமென்று தமிழ்நாட்டு மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். நாங்கள் இடியாப்ப சிக்கல் போன்ற சூழலில் தான் திமுக ஆட்சிக்கு வந்தது. எனக்கு, என்னைவிட தமிழ்நாட்டு மக்கள் மேல் கூடுதலான நம்பிக்கை இருக்கிறது. உறுதியாகச் சொல்கிறேன். நாங்கள்தான் மீண்டும் வருவோம்! மீண்டும் மீண்டும் வருவோம்! மீண்டும் வெல்வோம்! மீண்டும் மீண்டும் வெல்வோம்! எங்களின் சாதனைகளை மிஞ்சும் அளவுக்கு திமுக […]
பா.ஜ.க. கூட்டணிக்குத் தமிழ்நாடு எப்போதுமே தோல்வியைத்தான் தரும்! – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி!
முதல்வர் ஸ்டாலின் பதிவு: “தமிழ்நாடு என்டிஏ-வின் துரோகங்களை எண்ணிப் பார்க்கிறது.. தேர்தல் சீசன் வந்தால் மட்டும், தமிழ்நாடு பக்கம் அடிக்கடி வரும் மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே… தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய 3,458 கோடி ரூபாய் சமக்ர சிக்ஷா கல்வி நிதி எப்போது வரும்?.Delimitation-இல் தமிழ்நாட்டின் தொகுதிகள் குறைக்கப்படாது என்ற உறுதிமொழி உங்கள் வாயில் இருந்து எப்போது வரும்?.பா.ஜ.க.வின் முகவர்போல் செயல்படும் ஆளுநரின் அராஜகம் எப்போது முடிவுக்கு வரும்?.தமிழ்ப்பாசத்தில் தமிழர்களை மிஞ்சியதாய்க் காட்டிக்கொள்ளும் உங்கள் அரசிடம் இருந்து தமிழுக்குரிய […]
18 சேவைகள் அடங்கிய ‘ஸ்பிரின்ட் 1’ – பதிவுத் துறையின்கீழ் புதிய திட்டம் தொடக்கம்
பதிவுத் துறையின் ஸ்டார் 3.0 திட்டத்தின் கீழ், காகிதமில்லா ஆவணப்பதிவு, நேரடி வருகை இல்லா ஆவணப்பதிவு, தானியங்கி பத்திர உருவாக்கம் உள்ளிட்ட 18 சேவைகளை உள்ளடக்கிய ‘ஸ்பிரின்ட் 1’ செயல் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
ராமதாசுடன் திமுக பேச்சுவார்த்தை
திமுக கூட்டணியில் சேர்வது குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாஸ் பேச்சாற்றை நடத்தி வருகிறார் இதே போல ஜான்பாண்டியனும் திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார் விரைவில் இது பற்றி இறுதி முடிவு எடுக்கப்பட வேண்டும் கூறினார்
வைகோ பாத யாத்திரை இன்று நிறைவு
போதைப்பொருள் ஒழிப்பு, சாதி, மத மோதல் தடுப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி, கடந்த 2ம் தேதி திருச்சியில் தொடங்கிய சமத்துவ நடைபயணத்தை மதுரையில் இன்று நிறைவு செய்கிறார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஓபுளா படித்துறை பகுதியில் நடைபெறும் நிறைவு விழாவில் அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மதுரை எம்.பி.வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்
கனிமொழிக்கு ஸ்டாலின் வாழ்த்து
திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி, பல அரசியல் கட்சி தலைவர்களும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி பிறந்தநாளையொட்டி, “கர்ஜனை மொழி – என் தங்கை கனிமொழி” என முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!
சென்னையில் முதல்வர் மு.க. ஸ்டாலினை மத்திய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இன்று சந்தித்துப் பேசியுள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வரின் இல்லத்தில் இந்த சந்திப்பானது நடைபெற்றதாகக் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கவுள்ள நிலையில் அரசியல் நிலவரம் குறித்து இருவரும் பேசியதாகக் கூறப்படுகிறது