கேட்பாரற்றுக் கிடந்த 9 பவுன் நகையை போலீசில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்

சென்னையை அடுத்த தாம்பரம் ரங்கநாதபுரம் காதர்பாய் தெருவை சேர்ந்தவர் சாகுல் ஹமீது. ஆட்டோ டிரைவர். இவரது மகள் நஸ்ரின் பானு. நேற்று அதிகாலை முதல் தாம்பரம் பகுதியில் விட்டுவிட்டு மழை பெய்து வந்தது. சாகுல் அமீது, தாம்பரம் ரெயில் நிலையத்துக்கு சவாரி ஏற்ற சென்றபோது மழை பெய்ததால் ஆட்டோவின் உள்ளே மழைநீர் விழாமல் தடுக்க வீட்டில் இருந்த போர்வையை எடுத்து சென்றார்.அவரது மகள் நஸ்ரின் பானு, இரவில் தூங்கும்போது தான் அணிந் திருந்த 9 பவுன் நகையை […]

சாலையில் கிடந்த ஏகே 47 துப்பாக்கி

சென்னை, ராமாபுரத்தில் சாலையில் கிடந்த ஏகே 47 துப்பாக்கியால் அதிர்ச்சி ஏற்பட்டது.இந்த துப்பாக்கியுடன் 30 தோட்டாக்களும் கண்டெடுக்கப்பட்டன.மியாட் மருத்துவமனை சிக்னல் அருகே சாலையில் கிடந்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை, சிவராஜ் என்பவர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

ரூபாய் 5 லட்சம் கோடி மதிப்புள்ள ஹெராயின் காணவில்லை?

போதைப்பொருள் தடுப்புப் பிரிவால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.5 லட்சம் கோடி மதிப்புள்ள ஹெராயின் காணாமல் போனது குறித்து விசாரணை நடத்தக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு! கடந்த 2018 -2020 இடையில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 5 லட்சம் கோடி மதிப்பிலான ஹெராயின் காணாமல் போயுள்ளதாக பத்திரிகையாளர் அரவிந்தாக்சன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு! அந்த காலகட்டத்தில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவால் 70,772 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காணாமல் போன விவகாரத்தை விசாரிக்கக் […]

தமிழகம் ஸ்ரீபெரும்புதூர் அருகே காணாமல் போன 3 பள்ளி சிறுவர்கள் நெல்லூரில் மீட்பு!!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே காணாமல் போன 3 பள்ளி சிறுவர்கள் ஆந்திரா மாநிலம் நெல்லூரில் மீட்கப்பட்டனர். செரப்பணஞ்சேரி பகுதியில் அரசுப்பள்ளியில் பயின்ற 6ம் வகுப்பு மாணவர்கள் மாயமான நிலையில் காவல்துறையினர் அவர்களை மீட்டனர்.

ஆம்பூர் அருகே வேலைக்கு சென்ற இளம்பெண் மாயம்!

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது இளம்பெண். இவர் வாணியம்பாடி பகுதியில் ஒரு துணி கடையில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் எங்கும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து இளம்பெண்ணின் தாய் உமராபாத் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி […]