அரசு ரகசியங்களை பாதுகாக்க தவறியதாக குற்றச்சாட்டு : பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் கைது!

பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியின் துணைத் தலைவரான ஷா மஹ்மூத் குரேஷி, முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு மிகவும் நெருக்கமானவர். இந்நிலையில் அவரை சனிக்கிழமை இரவு மத்திய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீரென கைது செய்தனர்.குரேஷி வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த போது அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய தகவலின் ரகசியத்தை காக்க தவறிய குற்ற்சாட்டின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் இஸ்லாமாபாத் முதன்மை நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட அவரை மத்திய புலனாய்வு முகமை ஒருநாள் […]

பணம் கேட்டு மிரட்டிய புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் மீது வழக்குப்பதிவு

பணம் கேட்டு மிரட்டிய புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூர் சார்பதிவாளர் முத்துசாமியிடம் பணம்கேட்டு மிரட்டியதாக 2 பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மணிப்பூர் கலவரம் ஒய்வு. மத்திய மந்திரி வண்டலூரில் பேட்டி

வண்டலூரில் உள்ள தேசிய பாதுகாப்பு படை வளாகத்தில் 30.89 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள 64 குடியிருப்பு வளாகங்களை ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார். அதனை தொடர்ந்து தேசிய பாதுகாப்பு படை வீரர்களுடன் கலந்து உரையாற்றினார். அப்போது:- 9 ஆண்டுகளில் தேசிய பாதுகாப்பு படை வீரர்களுக்காக 28 ஆயிரம் வீடுகளை மத்திய அரசு கட்டி வழங்கி உள்ளது. பாதுகாப்பு வீரர்களின் நலனுக்காக பிரதமர் நரேந்திர மோடி ஆயுஷ்மான் […]

சட்டவிரோத பணப்பரிமாற்றம்: வழக்கில் மராட்டிய முன்னாள் அமைச்சருக்கு ஜாமின்

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் மராட்டிய முன்னாள் அமைச்சர் நவாப் மாலிக்கிற்கு ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம் மாலிக்கிற்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது. அமலாக்கத்துறையின் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் நவாப் மாலிக்கிற்கு ஜாமின் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவ காரணங்களுக்காக நவாப் மாலிக்கிற்கு ஜாமின் வழங்க அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

சர்ச்சையில் சிக்கிய ரோஜா

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று, நடிகையும் ஆந்திராவின் அமைச்சருமான ரோஜா, சுவாமி தரிசனம் செய்தார். இதையடுத்து அவர் தரிசனம் முடிந்து கோயில் வெளியே வந்தபோது வயதில் மூத்த 2 பெண்கள் பரிசுகள் கொடுத்து அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டனர். இச்சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நில அபகரிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி விடுதலை

சைதாப்பேட்டையில் அரசுக்கு சொந்தமான 3,630 சதுர அடி இடத்தை அபகரிக்கும் நோக்கில் செயல்பட்டதாக புகார். கடந்த 1996-2001ல் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த போது, நிலத்தை அபகரித்ததாக பொன்முடி மீது வழக்கு. குற்றச்சாட்டுகள் நிரூபணம் செய்யப்படவில்லை- சிறப்பு நீதிமன்றம். “அமைச்சர் பொன்முடி மீதான வழக்கில் போதிய ஆவணங்கள் இல்லை” எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.

அமைச்சரவை மாற்றம்!

நாளை அறிவிப்பு வெளியாக வாய்ப்பு? டில்லியில் உள்ள பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டாவை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் சந்தித்துள்ளார்.  மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், ஜெ.பி. நட்டாவுடனான சந்திப்பு நடைபெற்றுள்ளது. சட்டத் துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், புவி அறிவியல் அமைச்சர் கிரண் ரிஜிஜூ ஆகியோரும் சந்தித்தனர்.  அடுத்தாண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல், அடுத்தடுத்து வரக்கூடிய சட்டப்பேரவைத் தேர்தல்களை முன்னிட்டு பல்வேறு யுத்திகளை பாஜக வகுத்து வருகின்றது. […]

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது விசாரணை

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது விசாரணை தொடங்க அனுமதிக்க வேண்டும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகளில் விசாரணையை தொடங்க இசைவு ஆணையை சுட்டிக்காட்டி கவர்னருக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடிதம் எழுதியுள்ளார்.