புதுச்சேரி : முன்னாள் அமைச்சர் ப.கண்ணன் காலமானார். புதுச்சேரி முன்னாள் எம்.பி கண்ணன் காலமானார்

புதுச்சேரி: புதுச்சேரி அரசியலில் ஆளுமை மிக்கவராக திகழ்ந்த முன்னாள் எம்.பி கண்ணன் காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முன்னாள் சபாநாயகரும், அமைச்சரும், எம்.பி.யுமான கண்ணன், நிமோனியாவால் ஞாயிற்றுக்கிழமை இரவு 9:51 மணி அளவில் காலமானார். இதனை அவர் சிகிச்சை பெற்று வந்த ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவருக்கு நுரையீரல் நோய் பாதிப்பு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் சம்பவத்தைத் தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் பாஜகவுக்கும் தனக்கும் எந்த […]

டெல்லி சமூகநலத்துறை அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை…

டெல்லி சமூகநலத்துறை அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஹவாலா பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமைச்சர் ராஜ்குமார் இல்லத்தில் சோதனை நடப்பதாக தகவல் கிடைத்துள்ளது…

தமிழகத்தில் 8 புதிய நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்க முடிவு

தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி மிகப்பெரிய அளவில் முன்னேறியுள்ளது. புதிய தொழில் நிறுவனங்களுக்கான தொகுப்பு சதவீத சலுகை வழங்குவது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 22,000 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக அமைச்சரவை கூட்டத்துக்கு பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசுசெய்தியாளர் சந்திப்பில் தகவல்.

புதுச்சேரி போக்குவரத்து அமைச்சர் சந்திர பிரியங்கா தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்

இது குறித்து, முதலமைச்சர் ரங்கசாமிக்கு அவர் கடிதத்தில், `சொந்த பிரச்னைகளை ஆணாதிக்க கும்பல் கையில் எடுத்து காய் நகர்த்துவது நாகரீகம் அல்ல. தொடர்ந்து சாதிய ரீதியிலும், பாலின ரீதியிலும் தாக்குதலுக்கு உள்ளாவுதாக உணர்ந்தேன்” என குறிப்பிட்டுள்ளார்.

செய்யூர் ஆலம்பர கோட்டையை ஆசிய வங்கியுடன் இணைந்து 3 கோடி 8 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டுள்ளது என சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்

சென்னைக்கு 100 கிலோ மீட்டர் அளவிலும், மாமல்லபுரத்திற்கு 50 கிலோமீட்டரும், புதுச்சேரி 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆலம்பர கோட்டையை சுற்றுலாத்தலமாக மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்குமா என செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் பாபு கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், ஆலம்பரக்கோட்டை தமிழக தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஆலம்பரக்கோட்டை சுற்றி உள்ள பகுதிகளை மேம்படுத்த தமிழக தொல்லியல் துறையுடன் இணைந்து திட்ட மதிப்பீடு செய்து இதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என […]

காவிரி நீர் விவகாரத்தில் டெல்லி சென்று மத்திய ஜல்சக்தி துறை அமைச்சரை சந்திக்கும் தமிழக எம்.பிக்கள்

துரைமுருகன் தலைமையில் டெல்லி செல்லும் தமிழக அனைத்துக்கட்சி எம்.பிக்கள் 12 பேர் அடங்கிய குழு திமுகவின் டி.ஆர்பாலு, காங்கிரசின் ஜோதிமணி, அதிமுகவின் தம்பிதுரை மற்றும் சந்திரசேகரன் குழுவில் இடம் பெற்றுள்ளனர். மதிமுகவின் வைகோ, விசிகவின் திருமாவளவன், பாமகவின் அன்புமணி, தமாகாவின் ஜி.கே.வாசன் இடம் பெற்றுள்ளனர். சுப்பராயன்(சிபிஐ), ஆர்.நடராசன்(சிபிஎம்), சின்னராஜ்(கொமதேக), நவாஸ் கனி(இ.யூ.மு.லீ) இடம் பெற்றுள்ளனர்.

இந்தியாவின் மிக நீளமான கண்ணாடி பாலத்தை திறந்து வைத்தார், மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் முகமது ரியாஸ்

கேரளாவின் வாகமனில், எழில் கொஞ்சும் மலைகளின் அழகை ரசிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள, இந்தியாவின் மிக நீளமான கண்ணாடி பாலத்தை திறந்து வைத்தார், மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் முகமது ரியாஸ் 40 மீட்டர் நீளமுடைய இந்த பாலம், ₹3 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் நடந்து சென்று இயற்கை அழகை ரசிக்க, ஒரு நபருக்கு (10 நிமிடங்கள்) ₹500 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஒரே நேரத்தில் 15 சுற்றுலா பயணிகளுக்கு மேல், அனுமதிக்கப்பட மாட்டார்கள் என கூறப்பட்டுள்ளது

நெல்லை மேயர் சரவணனுடன் அமைச்சர் ஆலோசனை!

சர்ச்சை, உட்கட்சி பூசல் முற்றிய நிலையில் நெல்லை மேயர் சரவணனுடன் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதில், நெல்லை மேயர், துணை மேயர், நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன் கான் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை செப்டம்பர் மாதம் ஒத்திவைப்பு.!

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை வருகிற செப்.13ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் வருமானத்திற்கு மீறி சொத்து சேர்த்ததாக திமுக அரசு 2006-ம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தது. அனிதா ராதாகிருஷ்ணன் 2001 முதல் 2006-ம் ஆண்டு வரை அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2020-ம் ஆண்டு அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்தது. இந்நிலையில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கில் […]