தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்னை அண்ணா சாலை, தமிழ்நாடு மின் ஆளுமை முகமை அலுவலகத்திற்கு, கூடுதல் அலுவலக மூன்றாம் தளத்தினை திறந்து வைத்தார்

இந்தநிகழ்வின் போது, தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார், தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை தலைமை தொழில்நுட்ப அலுவலர் ராபர்ட் ஜெரார்ட் ரவி, ITS, தமிழ் நாடு மின் ஆளுமை முகமையின் முதன்மை செயல் அலுவலர் பிரவீன் பி நாயர், தமிழ் நாடு மின் ஆளுமை முகமையின் இணை முதன்மை செயல் அலுவலர் பெ.ரமண சரஸ்வதி, மற்றும் தமிழ் நாடு மின் ஆளுமை முகமையின் ஆலோசகர் […]
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மீதான குட்கா முறைகேடு வழக்கில் குற்ற நடவடிக்கை எடுக்க சிபிஐக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்

ஆளுநர் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து சிபிஐ விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வாய்ப்பு. TNPSC தலைவர் தவிர பிற பணி நியமனங்கள் தொடர்பான கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்துவிட்டதாக உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு தகவல்.
குரோம்பேட்டை ஆர் எஸ் எஸ் பேரணியில் மத்திய மந்திரி முருகன்

ஆர்எஸ்எஸ் இயக்கம் ஆண்டுதோறும் விஜயதசமி அன்று நாடு முழுவதும் பேரணிகளை நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு தமிழ்நாட்டில் பேரணி நடத்த திட்டமிட்ட போது உரிய அனுமதி கிடைக்காததால் ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு கோர்ட் அனுமதியுடன் தமிழ்நாடு முழுவதும் 55 இடங்களில் பேரணி நடத்தப்பட்டது. குரோம்பேட்டையில் நடந்த பேரணியில் மத்திய மந்திரி எல். முருகன் ,பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், மாவட்ட தலைவர் செம்பாக்கம் வேதசுப்பிரமணியம், ஆர் எஸ் எஸ் பொறுப்பாளர் பத்மகுமார், மாவட்ட தலைவர்கள் சீதாராமன், […]
சங்கரய்யாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுமா? மத்திய மந்திரி பதில்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா, சென்னையில் காலமானார். அவருக்கு வயது 102. உடல் நலக் குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மரணம் அடைந்தார். அவரின் உடலுக்கு முதலமைச்சர் உட்பட பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்திய நிலையில் அரசு மரியாதையுடன் பெசன்ட் நகர் மின்மயானத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேரில் வந்து அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்சங்கரய்யா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து வணங்கினார் […]
சென்னையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனின் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தியதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார்

தியாகராய நகரில் உள்ள ஒரு திரையரங்கில் ஜிகர்தண்டா-2 படம் பார்த்துக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட தகராறு. திரையரங்கில் அதிக சத்தம் போட்ட 6 பேரை தட்டிக் கேட்டதால் அமைச்சர் மகன் ரமேஷ் மற்றும் பேரன் மீது தாக்குதல். காயமடைந்த அமைச்சரின் குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதி.
ரம்மி விளையாட்டில் திறமைக்கு வாய்ப்பு இருக்கிறது…ஆன்லைன் ரம்மி திறமை அடிப்படையில் வராது… எனவே அதை தடை செய்ய வேண்டும் என்பதே எங்கள் கருத்து” – அமைச்சர் ரகுபதி
அமைச்சர் செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் நவ.22ம் தேதி வரை நீட்டிப்பு; சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு..!!
சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் – உயர்நீதிமன்றம்

அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காவல்துறை கடமை தவறிவிட்டது – சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி. எந்த கொள்கைக்கும் எதிராக பேசுவதற்கு நீதிமன்றம் அனுமதிக்காது – உயர்நீதிமன்றம் “அதிகாரத்தில் உள்ளவர்கள் பொதுநிகழ்ச்சிகளில் பேசும்போது, சாதி, மதம், கொள்கை ரீதியாக பிளவு ஏற்படாதவாறு கவனத்துடன் பேச வேண்டும்” “குறிப்பிட்ட கொள்கையை ஒழிக்க வேண்டும் என பேசுவதற்கு பதில், மது, போதைப்பொருட்கள், ஊழலை ஒழிப்பதில் அமைச்சர்கள் கவனம் செலுத்தலாம்” திராவிடக் கொள்கைக்கு எதிராக கூட்டம் நடத்த அனுமதி கேட்டு திருவேற்காடு பகுதியைச் […]
சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர்பாபு மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் – நீதிபதி ஆவேசம்
முதல்வர் சந்திரசேகரராவை தேர்தலில் தோற்கடித்து தேசிய அளவில் அவரை வளரவிடாமல் தடுக்க காங்கிரஸ்,பாஜக கூட்டு சதி செய்துள்ளதாக தெலங்கானா அமைச்சர் கே.டி.ராமராவ் குற்றம் சாட்டினார்

தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவின் மகனும், மாநில அமைச்சருமான கே.டி.ராமராவ் நேற்று அளித்த பேட்டியில்,‘‘30ம் தேதி நடக்கும் பேரவை தேர்தலில் பாஜக கட்சி போட்டியிலேயே கிடையாது. பிஆர்எஸ் கட்சி 88 இடங்களில் வெற்றி பெற்று தென் மாநிலங்களில் முதல் முறையாக மூன்றாவது முறை முதல்வர் ஆனவர் என்ற பெருமை சந்திரசேகரராவுக்கு கிடைக்கும். மக்களிடையே அரசுக்கு எதிரான அதிருப்தி தேர்தலில் ஓரளவு பிரதிபலிக்கலாம், அதை மறுக்க முடியாது.மெடிகட்டா அணையின் தூண்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது என தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம் […]