தமிழக அமைச்சரவையில் புதிதாக 2 இளம் அமைச்சர்கள்?

மூத்த அமைச்சர்கள் இரண்டு பேர் தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.சென்னை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 33 அமைச்சர்களுடன் தமிழக அமைச்சரவை இயங்கி வருகிறது. இந்நிலையில் தமிழக அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் உள்ள தனது சொந்த தொகுதியான கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் நேற்று முன்தினம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கொளத்தூர் ஜி.கே.எம். காலனியில் நடைபெறும் சமுதாய நலக்கூடத்தின் கட்டுமான பணிகளை […]
மக்கள் குறைகளை தீர்க்க அதிகாரிகளுக்கு அமைச்சர் கோரிக்கை
அரசு அதிகாரிகள் விரைவாக செயல்பட்டு மக்களின் குறைகளை போக்க வேண்டும் கேளம்பாக்கத்தில் நடைபெற்ற ஊரக பகுதி மனுநிதி மூகாமில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு. செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரக பகுதி மக்களின் குறை தீர்க்கும் முகாம் கேளம்பாக்கத்தில் ஆட்சியர் அருண்ராஜ் தலைமையில் நடைபெற்றது. அமைச்சர் தா.மோ.அன்பரசன், காஞ்சிபுரம் எம்பி செல்வம், திருப்போர் விசிக எம்.எல்.ஏ எஸ்.எஸ்.பாலாஜி, ஒன்றியகுழு தலைவர் எல் இதயவர்மன், கேள்ம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ராணி எல்லப்பன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த […]
முன்னாள் திமுக அமைச்சர் இடங்களில் சோதனை
கோவையில் திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. கர்நாடகாவில் இயங்கி வரும் இவருக்கு சொந்தமான கல்குவாரிகளில் விதிமீறல் இருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் சோதனை செய்கின்றனர். சற்றுநேரத்திற்கு முன், அமைச்சர் பொன்முடி வழக்கில் தீர்ப்பு வந்த நிலையில், திமுக முன்னாள் அமைச்சருக்கும் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மத்திய சிறையில் தனி கட்டிடம் தேவைப்படும்: அண்ணாமலை கருத்து

மக்களின் வரிப் பணத்தை விஞ்ஞானப்பூர்வமாக மோசடி செய்யும் கலையில் பட்டம் பெற்றுள்ள ஊழலின் ஊற்று, இன்று உடைந்து நொறுங்கியிருக்கிறது. ஏற்கனவே ஒரு அமைச்சர் திரு செந்தில் பாலாஜி சிறையில் இருக்கையில், மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்புக்கு பின், மற்றொரு அமைச்சர் திரு பொன்முடி, அவருடன் சிறையில் இணைகிறார். திமுக அமைச்சர்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள எண்ணற்ற ஊழல் வழக்குகளைக் கணக்கில் கொள்ளும்போது, மத்திய சிறையில், திரு @mkstalin அமைச்சர்களுக்கு என ஒரு தனி கட்டிடம் […]
உயர்கல்வித்துறை அமைச்சராக ராஜ.கண்ணப்பன்- முதல்வர் அறிவிப்பு

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிப்பு தொடர்பான வழக்கில், 3 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டதால் அமைச்சர் பொன்முடி பதவி இழந்தார். இதைத் தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ. கண்ணப்பனுக்கு, உயர்கல்வித்துறை அமைச்சராக கூடுதல் பொறுப்பு- முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் ரவிக்கு கடிதம்.
விற்பனையை அதிகப்படுத்துவதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை;

பீர் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டது, மது அருந்துபவர்களை ஊக்குவிப்பதற்காக அல்ல; வியாபாரத்தை பெருக்குவது எங்களது நோக்கமல்ல; எப்படியாவது மது விற்பனையைக் குறைக்க வேண்டும் என்பதுதான் நோக்கம்”