முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், மாலை முரசு நிர்வாக இயக்குநர் இரா.கண்ணன் ஆதித்தன் சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்
தாம்பரம் மாநகராட்சி அலுவலக மாமன்ற கூட்ட அரங்கில் ஆணையாளர் ஆர்.அழகுமீனா தலைமையில் மிக்ஜாம் புயலினால் ஏற்பட்ட கனமழையால் பாதிக்கப்பட்ட மாநகராட்சி பகுதியில் மீட்புப்பணிகளை சிறப்பாக மேற்கொண்ட மீனவர்களுக்கு மேயர் வசந்தகுமாரி கமலகண்ணன் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்

இந்நிகழ்ச்சியில் துணை மேயர் கோ.காமராஜ் மண்டலகைமு தவைவர்கள், நிலைக்குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.
பெருங்களத்தூர் மண்டலம் குட்வில் நகர் பகுதியில் “மிக்ஜாம்” புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில், ரங்கநாத் ஆடம், திமான் சிங், ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்

உடன் அரசு முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, நகராட்சி நிர்வாக இயக்குநர் சு.சிவராசு, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.ரராகுல் நாத், கேபிள் டி.வி. நிர்வாக இயக்குநர் தாம்பரம் மாநகராட்சி கண்காணிப்பு அலுவலர் ஆ.ஜான்ஜூயிஸ், மாநகராட்சி ஆணையாளர் ஆர்.அழகுமீனா, உதவி ஆட்சியர் (பயிற்சி), ஆனந்த்குமார் சிங், தாம்பரம் சட்டமன்ற உ றுப்பினர் எஸ்.ஆர்.ராஜா உட்பட பலர் உள்ளனர்.
மிக்ஜாம் புயல் – மழை வெள்ள நிவாரணத்துக்காக, ஜாக்டோ ஜியோ அமைப்பைச் சேர்ந்த 14 லட்சம் அரசு ஊழியர்கள் தங்களது ஒரு நாள் ஊதியத்தை தமிழ்நாடு அரசுக்கு வழங்க முடிவு”

ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் அன்பரசு அறிவிப்பு
மிக்ஜாம் புயல் (MICHAUNG Cyclone) பாதிப்புகள்
ஒன்றியக் குழு (Central Team) – களஆய்வு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று (13.12.2023) புதன்கிழமை மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றியக் குழுவினர் களஆய்வு மேற்கொள்கிறார்கள். வடக்கு குழு – North Team காலை 10.30 மணி முதல் நண்பகல் 01.00 மணி வரை (1) கீழ்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் (2) வில்லிவாக்கம் டாக்டர் அம்பேத்கர் நகர் ஜசிஎப் லிங்க் சாலை (3) அம்பத்தூர் – தொழிற்பேட்டை, பாடி மின் […]