சென்னை பட்டினப்பாக்கம் மின்சார வாரிய அலுவலகத்தில் 3 நாட்களாக மின்சாரம் இல்லாததால் மக்கள் அலுவலகத்தில் சூழ்ந்ததால் பதற்றம்.
காஞ்சிபுரம் மாவட்ட வெள்ளமிீட்பு பணிக்காக நியமிக்கப்பட்ட அமைச்சர் முத்துசாமியை டிரக்டரில் அமரவைத்து வெள்ள பாதிப்பு பகுதிகளை பார்வையிட வண்டலூர்-மிஞ்சூர் வெளிவட்ட சாலையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வபெருந்தகை ஓட்டி சென்றார்.
மின்சார சப்ளை கொடுக்கபோலிஸ் பாதுகாப்புடன் செல்லும் மின்சார ஊழியர்கள்.

தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் புயல் வெள்ளம் பாதிப்பு கடுமையாக உள்ளது.குறிப்பாக முடிச்சூர் வரதராஜபுரம் போன்ற பகுதிகளை அடக்கிய மேற்கு தாம்பரம் தொடர்ந்து வெள்ளத்தில் தத்தளிக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறக்கப்பட்டபோது முடிச்சூர் வரதராஜபுரம் பகுதிகளில் தண்ணீர் உள்ளே செல்ல முடியாமல் தேங்கி இருப்பதால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக இந்த பகுதி ஒவ்வொரு மழையின் போதும் வெள்ளத்தில் தான் மூழ்கி தவிக்கிறது. காரணம் இந்த பகுதியில் ஏராளமான வீடுகள் ஆக்கிரமிப்பு பகுதியில் கட்டப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. […]