மெட்ரோ ரயிலில் செப்டம்பர் மாதத்தில் 92.77 லட்சம் பயணிகள் பயணம்

சென்னை மெட்ரோ ரயிலில் செப்டம்பர் மாதத்தில் மட்டும் 92.77 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக செப்டம்பர் 6ம் தேதி மட்டும் 3.74 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர்.
சென்னையில், மெட்ரோ ரெயிலின் ஐந்தாவது வழித்தடம் கோயம்பேட்டில் இருந்து ஆவடி வரை நீட்டிப்பு

விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய டெண்டர் கோரியது, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம்
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2ல் நடைமேடை தடுப்பு கதவுகள் அமைக்க ரூ.159.97 கோடி மதிப்பில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது
சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2-ல், வழித்தடம்-3 (சோழிங்கநல்லூர் ஏரி முதல் சிப்காட் 2 வரை) மற்றும் வழித்தடம்-5-ல் (கோயம்பேடு மொத்த சந்தை வளாகம் மெட்ரோ முதல் எல்காட் வரை) ஆகிய இரண்டு உயர்மட்ட வழித்தடங்களில் அமையவுள்ள மெட்ரோ இரயில் நிலையங்களுக்கு நடைமேடை தடுப்பு கதவுகள் அமைப்பதற்கான ஒப்பந்தம் ரூபாய் 159.97 கோடி மதிப்பில் எஸ்டி இன்ஜினியரிங் அர்பன் சொல்யூஷன்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மு.அ.சித்திக் முன்னிலையில், சென்னை […]
மெட்ரோ ரயிலில் வரும் 17ம் தேதி ரூ.5 கட்டணத்தில் பயணிக்கலாம் – மெட்ரோ நிர்வாகம்

சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நாளான டிச.3ம் தேதி ரூ.5 கட்டணத்தில் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டது புயல் காரணமாக டிசம்பர் 3ம் தேதி அதிக மக்கள் பயணம் செய்யாததால், டிச.17ல் பயணிக்க ஏற்பாடு
சென்னை முழுவதும் இணைய சேவை பாதிக்கப்பட்டுள்ளதால், ஆன்லைன் மூலமாக மெட்ரோ டிக்கெட் முன்பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது

சிங்கார சென்னை அட்டைகளும் தற்போது செயல்படாத காரணத்தினால், ரயில் நிலையங்களிலேயே பயணிகளுக்கு பிளாஸ்டிக் டோக்கன் டிக்கெட்டுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது -சென்னை மெட்ரோ நிர்வாகம் தகவல்
கண் பார்வை குறைவுடையோர் வசதிக்காக மெட்ரோ ரயில் நிலைய நுழைவாயிலில் இருந்து நடைமேடை வரை, தொட்டு உணர்வு நடைபாதை நிறுவப்பட்டுள்ளன

சென்னை மெட்ரோ ரயில் நிர்வகம்
ஓட்டுநர் இல்லாத மெட்ரோ இரயில் – ரூ.269 கோடி மதிப்பில் ஒப்பந்தம்!

சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2-ல் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ இரயில்களை உருவாக்க ரூ.269 கோடி மதிப்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் தமது X பக்கத்தில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், ஒட்டுனர் இல்லாமல் இயக்கப்படும் 3 பெட்டிகளைக் கொண்ட 10 மெட்ரோ இரயில்களை, மொத்தம் 30 பெட்டிகள் வழங்குவதற்கான துணை ஒப்பந்தத்தை அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.269 கோடி மதிப்பில், அதாவது வரிகள் உட்பட வழங்கியுள்ளது. […]
பயண நேரத்தை குறைக்க சென்னை மெட்ரோ நடவடிக்கை

சென்னை மெட்ரோ பயணிகளின் பயண நேரத்தை குறைக்கும் வகையில் நெரிசல் மிகு நேரம் இல்லாத (Non Peak Hours) மற்ற நேரங்களில், 7 நிமிடத்திற்கு ஒரு ரயில் என்ற புதிய நடைமுறை இன்று முதல் அமல். மக்கள் அதிகம் பயன்படுத்தும் நெரிசல் மிகு நேரங்களான காலை 8 மணி முதல் 11 மணி வரையும், அதேபோல மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 3 மற்றும் 6 நிமிடத்திற்கு ஒரு ரயில் என […]
தீபாவளி விடுமுறையை முன்னிட்டு நெரிசல்மிகு மாலை நேரத்தில் மெட்ரோ இரயில் சேவை நீட்டிப்பு

தீபாவளி தொடர் விடுமுறையையொட்டி நவ. 9, 10, 11 ஆகிய தேதிகளில் மாலை நெரிசல்மிகு நேரத்தில் இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவை இரவு 10 மணி வரை நீட்டிப்பு இரவு 8 மணி முதல் 10 மணி வரை 2 வழித்தடங்களிலும் 9 நிமிட இடைவெளிக்கு பதிலாக 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் – சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்.