ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவுநாள் நாளை அனுசரிப்பு

மாவட்டம் முழுவதும் ஆறாயிரத்து 200 போலீசார் பாதுகாப்பு மாவட்டம் முழுவதும் உள்ள மதுக்கடைகளை அடைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவு

பல்லாவரத்தில் கருணாநிதி நினைவு நாள்

முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 6ம் ஆண்டு நினைவு நாள் பல்லாவரம் தொகுதி திமுக சார்பில் குரோம்பேட்டையில் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி தலைமையில் திமுகவினர் மலர்துவி புகழ் அஞ்சலி செலுத்தினார்கள். முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 6 ம் ஆண்டு நினைவுநாளையொட்டி பல்லாவரம் தொகுதி திமுக சார்பாக குரோம்பேட்டையில் மலர் அளங்காரம் செய்யப்பட்ட கலைஞரின் திரு உருவப்படத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி தலைமையில் தாம்பரம் துணை மேயர் ஜி.காமராஜ், மண்டலகுழு தலைவர்கள் ஜோசப் அண்ணாதுரை, வே.கருணாநிதி பகுதி செயலாளர்கள் பெர்ணட், […]

முத்தமிழறிஞர் கலைஞர் 6-வது ஆண்டு நினைவு நாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்

இந்நிகழ்வின்போது, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

பேரறிஞர் அண்ணாவின் 55- வது நினைவு நாளையொட்டி, செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அண்ணா தி. மு. க சார்பில், மாவட்ட கழகச் செயலாளர் சிட்லப்பாக்கம் ச.இராசேந்திரன் தலைமையில், தாம்பரம் மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள அண்ணாவின் திருவுரு சிலைக்கு கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

முன்னாள் அமைச்சர் டி. கே. எம். சின்னையா மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அண்ணா நினைவுநாளையொட்டி தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் அண்ணா சிலைக்கு சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா தலைமையில் திமுகவினர் பேரணியாக வந்து மாலை அணிவித்து மரியாதை செய்தனர்

இதில் மண்டலக்குழு தலைவர்கள் காமராஜ், இந்திரன், ஜெயபிரதீப் சந்திரன், மாமன்ற உறுப்பினர்கள், மகளிர் அணி நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

பேரறிஞர் அண்ணாவின் 55வது நினைவு நாளை முன்னிட்டு தாம்பரம் சண்முகம் சாலையில் உள்ள திருவுருவ படத்திற்கு தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் காமராஜ் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்

பின்பு சண்முகம் சாலையில் இருந்து அமைதி பேரணியாக சென்று தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் 36 ஆவது ஆண்டு நினைவு நாள் தாம்பரம் மாநகராட்சி அஸ்தினாபுரம் பகுதி 38வது வார்டு கிழக்கு பகுதியின் சார்பாக அன்னாரின் படத்திற்கு வட்ட செயலாளர் கே.தியாகராஜன், சீத்தாதியாகராஜன் தலைமையில் மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது

இந்த நிகழ்ச்சியில் வட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கு கொண்டனர்.

வி.பி.சிங் – நினைவு நாள்

எத்தனையோ வட இந்தியத் தலைவர்களை தமிழக மக்கள் அவர்களின் பெயர்களைத் தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டி மகிழ்ந்தனர். ஆனால் அந்தத் தலைவர்களெல்லாம் தமிழர்களை எந்த அளவிற்கு நேசித்தார்கள் என்பதையோ அல்லது அவர்கள் எப்படி தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தார்கள் என்பதையோ நாம் கண்கூடாக அறிந்ததில்லை. ஆனால் வி.பி.சிங் ஒருவர்தான் தமிழர்களின் இதயத்தோடு மட்டுமல்லாமல் உணர்வுகளோடும் உரிமைகளோடும் ஒன்றாய் இணைந்தவர். வி.பி.சிங் அரசியலின் அதிசயம். அவரை நினைவில் கொள்வோம். இன்னும் அறிய https://www.aanthaireporter.in/kalaignar-of-indian-politics-v-p-singh-memoirs/

“மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும் நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ”என மகாகவி பாரதி மனம் நொந்து பாடும் அளவுக்குக் கோவைச் சிறையில் கொடுமைக்குள்ளான வீரர் வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாள்!

தன் இளமை, சொத்து, பாரிஸ்டர் பட்டம் என அனைத்தையும் இழந்து வாழ்நாளெல்லாம் இந்திய விடுதலைக்காகப் போராடிய தனிப்பெரும் தியாகசீலராம் கப்பலோட்டிய தமிழரை நன்றிப்பெருக்குடன் நினைவுகூர்வோம்! அவரது பன்முகப்பட்ட வாழ்வையும் பணிகளையும் போற்றுவோம்! – முதல்வர் ஸ்டாலின்

தாம்பரத்தில் கருணாநிதி நினைவுநாள் தி.மு.க அஞ்சலி

முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 5 ம் ஆண்டு நினைவு நாளையொட்டி தாம்பரம் சண்முகம் சாலையில் அமைக்கப்பட்ட கலைஞரின் திரு உருவ படத்திற்கு தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா தலைமையில் திமுகவினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் கலைஞருக்கு வீரவணக்கம் கோஷமிட்டனர். மண்டல குழு தலைவர்கள் காமராஜ், இந்திரன், மாமன்ற உறுப்பினர்கள் ஜோதிகுமார், ரமணி ஆதிமுலம், டி.ஆர்.கோபி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார்கள்.