டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

மோடி பதவியேற்று 21 மணி நேரமாகியும் இலாகாக்கள் அறிவிக்கப்படாததால் பதவியேற்றுள்ள அமைச்சர்கள் குழப்பம்
ஜூன் 12ம் தேதி தமிழக சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம்

சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற உள்ளது. துறை ரீதியான மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறும் நாட்கள் குறித்து முடிவு செய்யப்படும். ஜூன் 24ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்க உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பு:

மக்களவைத் தேர்தலில் திமுக, பாஜகவை விட அதிமுகதான் அதிக வாக்குகளை பெற்றுள்ளது. பாஜகவிற்காக மோடி, அமித் ஷா, நட்டா என பலர் வந்து தமிழ்நாட்டில் பரப்புரை செய்தனர். திமுகவிற்கு அவர்கள் கூட்டணிக் கட்சியினர் பரப்புரையில் ஈடுபட்டனர்; தனியாகவே பரப்புரை செய்தேன். 2014 தேர்தலுடன் ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி 0.62% வாக்குகளை 2024இல் குறைவாகவே பெற்றுள்ளது. திமுக 2019இல் பெற்றதை விட 6.59% குறைவான வாக்குகளையே பெற்றுள்ளது. திமுக, பாஜகவை விட அதிமுகதான் அதிக வாக்குகளை […]
இன்று திமுக எம்.பி.க்கள் கூட்டம்

புதிய மத்திய அரசு அமைய உள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் இன்று கூடுகிறது.
டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திரபாபு நாயுடுவுடன் சந்திப்பு

இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சந்திரபாபு நாயுடுவை சந்தித்தார். இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றடைந்தார். டெல்லியில் இன்று மாலை 6 மணிக்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
ஜூன் 1-ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள், வேட்பாளர்கள், முகவர்கள் கூட்டம் நடைபெறும் என்று துரைமுருகன் அறிவிப்பு

ஜூன் 1-ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள், வேட்பாளர்கள், முகவர்கள் கூட்டம் நடைபெறும் என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி மாவட்ட செயலாளர்கள், வேட்பாளர்கள், தலைமை முகவர்கள், வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
குரோம்பேட்டை நேருநகர், ஸ்ரீ அய்யாசாமி அய்யர் துவக்க பள்ளியில் சென்றவாரம் பெற்றோர், ஆசிரியர் கூட்டம் நடைபெற்றது

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் வகுப்பறை செயல்பாடுகளான கதை, நாடகம், தனிநடிப்பு, உரையாடல், பாடல், கும்மி, வில்லுப்பாட்டின் மூலம் எண்ணும், எழுத்தும் செயல்பாடுகளையும் பெற்றோர்கள் முன் சிறப்பாக நிகழ்த்தி காட்டினார்கள். பெற்றோருக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தினர் நன்றி தெரிவித்தனர்.
இந்திய பத்திரிகை கவுன்சிலின் (Press Council of India) அங்கீகாரத்திற்கான துணைக் குழு (Sub-Committee on Accreditation) உறுப்பினர்கள் வினோத் கோஹ்லி (Thiru. Vinod Kohli) தலைமையில்
சென்னை, வாலாஜா சாலை, கலைவாணர் அரங்கம், மூன்றாம் தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் இன்று (22.01.2024) திங்கட்கிழமை பிற்பகல் 02.30 மணியளவில் பத்திரிகையாளர்களுடன் சந்திப்புக் கூட்டம் (Meeting with Journalists) நடைபெறுகிறது.
தமிழக பொருளாதாரம் 1 லட்சம் கோடி டாலரை எட்ட ஹூண்டாய் உறுதுணையாக இருக்கும்: உன்சூ கிம் உறுதி.

2030-ஆம் ஆண்டுக்குள் தமிழகம் ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலா் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாறுவதற்கு ஹூண்டாய் நிறுவனம் உறுதுணையாக இருக்கும் என அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் உன்சூ கிம் தெரிவித்தார்
தமிழ்நாட்டில் முதலீடுகளை குவிக்கும் நிறுவனங்கள்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் .

உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்ட நிறுவனங்கள் விவரங்கள் வருமாறு:- டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் கிருஷ்ணகிரியில் உள்ள தங்கள் எலக்ட்ரானிக் உற்பத்தி ஆலையை 12 ஆயிரத்து 82 கோடி ரூபாய் மதிப்பில் விரிவாக்கம் […]