கார்கில் போர் வெற்றியின் 25 வது ஆண்டு விழா அஸ்தினாபுரம் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பாக நடந்தது

இந்த நிகழ்ச்சிக்கு சமூக ஆர்வலர் மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கினார். கார்த்திக் கண்ணன், முன்னிலை வசித்தார். மக்கள் இயக்க நிர்வாகி வெங்கட்ராமன் மூ.கு.கிருஷ்ணமூர்த்தி, தேவராஜன், சினிமா துணை இயக்குநர். மற்றும் முனுசாமி வரதன் செல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர். விழாவில் சுமார் 300க்கும் மேற்பட்ட பள்ளிமாணவர்கள் பங்கேற்றனர். மாணவர்கள் ஆசிரியர்கள் போர்வீரர் நினைவு ஸ்தூபிக்கு புஷ்பாஞ்சலி செலுத்தினர்.