முதல்வர் மருந்தகம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

பொதுப்பெயர் வகை மருந்துகள் (Generic Medicines) மற்றும் பிற மருந்துகளைக் குறைந்த விலையில் கிடைக்கச் செய்யும் வகையில், ‘முதல்வர் மருந்தகம்’ என்ற புதிய திட்டம் அறிமுகம். இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 1,000 மருந்தகங்கள் திறக்கப்படும். இதைச் சிறப்பாகச் செயல்படுத்திட, மருந்தாளுநர்களுக்கும், கூட்டுறவு அமைப்புகளுக்கும் தேவையான கடன் உதவியோடு, ₹3 லட்சம் மானியம்.

மெடிக்கல்களில் சிசிடிவி கட்டாயம் – மதுரை ஆட்சியர்

மதுரையில் போதை மாத்திரை விற்பனை புகார் எதிரொலி மருந்தகங்களில் சிசிடிவி கட்டாயம் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு அனைத்து மருந்தகங்களிலும் 30 நாட்களுக்குள் சிசிடிவி பொருத்த வேண்டும் சிசிடிவி பொருத்தாவிட்டால் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை.

புதுச்சேரியில் மருத்துவ சேர்க்கை குளறுபடி விவகாரத்தில் சென்டாக் அதிகாரிகள் 2 பேர் நீக்கப்பட்டனர்

சென்டாக் ஒருங்கிணைப்பாளர் ருத்ர கவுடு, இணை ஒருங்கிணைப்பாளர் சிவராஜ் ஆகியோர் நீக்கப்பட்டனர். மருத்துவக் கவுன்சில் விதிகளை மீறி மாணவர் சேர்க்கையை தாமதமாக நடத்திய விவகாரத்தில் இருவர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் காலியாக உள்ள மருத்துவ இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு

அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாமல் உள்ள இடங்களுக்கு இன்று முதல் நவ. 7 வரை கலந்தாய்வு மாநில ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நவ. 7 முதல் 15ம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு மாணவர்கள் tnmedicalselection.org என்ற இணையதளத்தை தொடர்ந்து பார்வையிடுமாறு தேர்வுக்குழு செயலாளர் அருணலதா அறிவிப்பு

தமிழ்நாடு இந்திய மருத்துவப் படிப்புகளுக்கு 4,683 போ் விண்ணப்பம்!

தமிழகத்தில் சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கு நிகழாண்டில் 4,683 போ் விண்ணப்பித்துள்ளனா். அவை பரிசீலிக்கப்பட்டு விரைவில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படவுள்ளது. இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின்கீழ் தமிழகத்தில் செயல்படும் 5 அரசு கல்லூரிகளில் உள்ள 330 இளநிலை மருத்துவ இடங்களில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 இடங்கள் வழங்கப்படுகின்றன. மீதமுள்ள 280 இடங்களை மாநில அரசு நிரப்பி வருகிறது. அதேபோன்று 28 தனியாா் கல்லூரிகளில் உள்ள 1,820 இந்திய மருத்துவப் […]