டெல்லியில் பிரதமர் உடனான சந்திப்புக்குப் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு.

தமிழ்நாட்டின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமர் மோடியுடன் அளித்துள்ளேன் சென்னை மெட்ரோ 2ம் கட்ட பணிகள் மத்திய- மாநில அரசுகளின் கூட்டாக மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு பணிகள் தொடங்கின. பட்ஜெட்டிலும் நிதி ஒதுக்கீடு அறிவிப்பு வெளியானது. எனினும், இதுவரை நிதி வழங்கப்படவில்லை. உரிய நிதிப்பங்கீடு அளிக்காததால் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இலங்கையில் புதிய அரசு அமைந்துள்ளதால் பேச்சுவார்த்தை நடத்தி மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என கேட்டுக்கொண்டேன்.
புதிய தலைமுறை செய்தியாளர் சாந்தகுமார் தாக்கப்பட்டார்..!
பள்ளிக்கரணையில் செய்தி சேகரிக்க சென்ற புதிய தலைமுறை செய்தியாளரை உதவி ஆய்வாளரால் தாக்கப்பட்டார்..!