எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு ஜூலை 30-ம் தேதி தொடங்குகிறது:

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலில் திருநெல்வேலி மாணவர் சூரியநாராயணன் முதல் இடம் பிடித்துள்ளார். கலந்தாய்வு ஜூலை 30-ம் தேதி தொடங்குகிறது. தமிழகத்தில் அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 6,600 எம்பிபிஎஸ், 1,583 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இதில் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 495 எம்பிபிஎஸ், 119 பிடிஎஸ் இடங்கள் வழங்கப்படும். இதுதவிர, தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 1,659 எம்பிபிஎஸ், 530 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் […]

MBBS மாணவர் சேர்க்கை – அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாமல் இருந்த 86 இடங்களுக்கு தமிழ்நாடு அரசே கலந்தாய்வு நடத்தி நிரப்ப முடிவு

மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஒன்றிய அமைச்சர் மண்சுக் மாண்டவியாவிற்கு எழுதிய கடிதத்தின் அடிப்படையில் உத்தரவு கிடைக்கப் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான 2ம் சுற்று கலந்தாய்வு இணைய வழியில் இன்று தொடங்கியது

2ம் சுற்று கலந்தாய்வில் காலியாக உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு வரும் ஆக.23ம் தேதி மாலை 5 மணி வரை இணையதளங்களில் பதிவு செய்யலாம் என மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவிப்பு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் தரவரிசை பட்டியல்; மாணவர்கள் அசத்தல்

தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் நேற்று வெளியிட்டார். இதில் சேலம் மாணவி கிருத்திகா, விழுப்புரம் மாணவர் பிரபஞ்சன் ஆகியோர் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளனர். சென்னை மாணவர் சூர்ய சித்தார்த் 2வது இடமும் சேலம் மாணவர் வருண் 3வது இடமும் பிடித்துள்ளனர்.

இன்று மாலையுடன் நிறைவு!

தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பப்பதிவு இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கு 13,000 பேர், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு சுமார் 27,000 பேர் என மொத்தம் 40,000க்கும் மேற்பட்டோர் இதுவரை விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு ஜூலை 16ல் தரவரிசைப் பட்டியல் வெளியாகும்.

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு இதுவரை 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்துள்ளனா்.

வரும் புதன்கிழமை வரை விண்ணப்ப அவகாசம் இருப்பதால் அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள அரசு, தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் அரசு மற்றும் நிா்வாக ஒதுக்கீட்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு இணையதளங்களில் விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த மாதம் 28-ஆம் தேதி தொடங்கியது. இணையவழி விண்ணப்பப் பதிவுக்கான அவகாசம் கடந்த திங்கள்கிழமையுடன் (ஜூலை 10) நிறைவடையவிருந்த நிலையில், மாணவா்களின் கோரிக்கையை ஏற்று வரும் 12-ஆம் தேதி மாலை 5 மணி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. […]