தாம்பரம்‌ மாநகராட்சியின்‌ மாமன்ற கூட்டம்

தாம்பரம்‌ மாநகராட்சியின்‌ மாமன்ற கூட்டம்‌ மேயர்‌ வசந்தகுமாரி கமலகண்ணன்‌ தலைமையில்‌ (29.09.2023) மாநகராட்சி மைய அலுவலக மாமன்ற கூட்டரங்கில்‌ நடைபெற்றது. இக்கூட்டத்தில்‌ துணை மேயர்‌ கோ.காமராஜ்,‌ ஆணையர்‌ ஆர்‌.அழகுமீனா, மண்டலக்‌ குழு தலைவர்கள்‌, நிலைக்‌ குழு தலைவர்கள்‌ மற்றும்‌ மாமன்ற உறுப்பினர்கள்‌ ஆகியோர்‌ கலந்து கொண்டனர்‌.

பம்மல் பகுதியில்‌ நடைபெற்று வரும்‌ பாதாள சாக்கடை பணிகளை மேயர் ஆய்வு‌

மாநகராட்சி ஆணையாளர்‌ ஆர்‌.அழகுமீனா, தலைமையில்‌ தாம்பரம்‌ மாநகராட்சிக்குட்பட்ட பம்மல்‌ மண்டலம்‌ வார்டு-7, அண்ணா நகர்‌ பகுதியில்‌ நடைபெற்று வரும்‌ பாதாள சாக்கடை பணிகளை மேயர்‌ வசந்தகுமாரி கமலகண்ணன்‌, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்‌. இந்த ஆய்வின்‌ போது துணை மேயர்‌ கோ.காமராஜ்‌‌, மண்டல குழுத்தலைவர்‌ வே.கருணாநிதி, மாமன்ற உறுப்பினர்கள்‌, தலைமை பொறியாளர்‌, செயற்பொறியாளர்‌, உதவி செயற்பொறியாளர்கள்‌, உதவி/இளநிலை பொறியாளர்கள்‌ உட்பட பலர்‌ உடனிருந்தனர்‌.

தாம்பரம் மேயர் மழைநீர்‌ வடிகால்‌ பணிகள் பார்வையிட்டு ஆய்வு

தாம்பரம்‌ மாநகராட்சிக்குட்பட்ட செம்பாக்கம்‌ மண்டலம்‌, வார்டு-41 மசூதி காலனி பகுதியில்‌ மழைநீர்‌ வடிகால்‌ பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட பின்னர்‌, தூர்வாரும்‌ பணிகளை உடனடியாக மேற்கொள்ள மேயர்‌ வசந்தகுமாரி கமலகண்ணன்‌ அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்‌. இந்த ஆய்வின்‌ போது துணை மேயர் கோ.காமராஜ்‌ மாமன்ற உறுப்பினர்கள்‌, உதவி செயற்பொறியாளர்‌, உதவி/இளநிலை பொறியாளர்‌, மாநகராட்சி அலுவலர்கள்‌ உட்பட பலர்‌ உள்ளனர்‌.

தாம்பரத்தில் அண்ணா பிறந்தநாள் | மாநகராட்சியில் திமுகவினர் மரியாதை

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் பேரறிஞர் அண்ணா 115வது பிறந்தநாளை முன்னிட்டு தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அண்ணா உருவ சிலைக்கு தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் காமராஜ் அவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில் தாம்பரம் மாநகராட்சி திமுக துணை செயலாளர் பொன் சதாசிவம்,மாமன்ற உறுப்பினர்கள் கழக நிர்வாகிகளும் உடன் இருந்தனர் ..

தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம், EnnVee Solutions Pvt Ltd, HLL Lifecare Ltd இணைந்து நடத்திய விழிப்புணர்வு …

சென்னை – நந்தனத்தில் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம், EnnVee Solutions Pvt Ltd, HLL Lifecare Ltd இணைந்து நடத்திய மாதவிடாய் குப்பி (Menstrual Cup) குறித்த விழிப்புணர்வு – வழங்கல் துவக்க விழாவில் துர்கா ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டு, மாதவிடாய் குப்பிகளை பொதுமக்களுக்கு வழங்கினார்கள். இந்நிகழ்வில், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

கேரளாவுக்கு 40 திமுக கவுன்சிலர்களை இன்ப சுற்றுலா அழைத்துச் சென்ற மேயர்.. சிக்க வைத்த வைரல் வீடியோ

தனது பதவியை தக்க வைத்துக் கொள்ள மத்திய மாவட்ட செயலாளர் ஆலோசனைப்படி மேயர் இராமச்சந்திரன், மாநகராட்சியில் உள்ள திமுக கவுன்சிலர்களை சரிகட்ட புது வியூகம் அமைத்ததாகவும், அதன்படியே இந்த சுற்றுலா திட்டம் எனவும் கூறப்படுகின்றது. சேலம் மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள் 40 பேர், கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி கேரளாவுக்கு மூன்று நாள் இன்ப சுற்றுலாவுக்கு சென்றுள்ளார்கள். ஒவ்வொரு கவுன்சிலரும் அவருடன் மூன்று பேரை அழைத்துவர அனுமதி வழங்கப்பட்டு, அதில் சில கவுன்சிலர்கள் தனது குடும்பத்தினரையும், சிலர் […]

மணிப்பூர் சம்பவம் : தாம்பரம் மேயர் ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் பாலியல் வன்கொடுமையை தடுக்கா ஒன்றிய பாஜக அரசை கண்டித்து செம்பாகத்தில் தாம்பரம் மேயர் தலைமையில் திமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு நடந்த பாலியல் வன்கொடுமையை தடுக்காத ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து தாம்பரம் சட்டமன்ற தொகுதி திமுக மகளிர் அணி சார்பில் செம்பாக்கம், காமராஜபுரம் பேருந்து நிலையம் அருகில் தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் நெல்லிக்குப்பம் […]

தாம்பரம் மாநகராட்சியில் சரியாக குப்பை அள்ளாத தனியார் நிறுவனம். உறுப்பினர்கள் சரமாரி புகார்

தாம்பரம் மாநகராட்சியின் சாதாதணகூட்டம் மேயர் வசந்தகுமாரி தலைமையில் நடைபெற்றது.இதில் துணை மேயர் ஜி.காமராஜ், ஆணையாளர் அழகு மீனா ஐ.ஏ.எஸ் மண்டல குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். 74 முக்கிய பொருள்களை மன்ற கூட்டத்தில் முன் வைத்து விவாதிக்கப்பட்டது. அப்போது மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி உள்ளாட்சி பிரமுகர்களாக மேயர், துணை மேயர், மாமன்ற உறுப்பினர்களுக்கு மதிப்பூதியம் வழங்கிட தமிழக முதலமைச்சர் அறிவிப்பிற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினார்கள். அதனையடுத்து பேசும்போது குப்பைகளை அகற்ற அவர் லேண்ட் […]

தாம்பரம்‌ மாநகராட்சியின்‌ மாமன்ற கூட்டம்

தாம்பரம்‌ மாநகராட்சியின்‌ மாமன்ற கூட்டம்‌ மேயர்‌ வசந்தகுமாரி கமலகண்ணன்‌ தலைமையில்‌ இன்று (28.07.2023) மாநகராட்சி மைய அலுவலக மாமன்ற கூட்டரங்கில்‌ நடைபெற்றது. இக்கூட்டத்தில்‌ துணை மேயர்‌ கோ.காமராஜ்‌, ஆணையர்‌ ஆர்‌.அழகுமீனா‌, மண்டலக்‌ குழு தலைவர்கள்‌, நிலைக்‌ குழு தலைவர்கள்‌ மற்றும்‌ மாமன்ற உறுப்பினர்கள்‌ ஆகியோர்‌ கலந்து கொண்டனர்‌.