ஓடிடி தளத்தில் வெளியானது ‘மாவீரன்’

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மாவீரன்’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியானது. இதில் அதிதி ஷங்கர், சரிதா, மிஷ்கின், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்நிலையில் இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

குரோம்பேட்டை தியேட்டரில் மாவீரன் படம் பார்த்த சிவகார்த்திகேயன்

குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் இன்று வெளியான மாவீரன் முதல் காட்சியை நடிகர் சிவகார்த்திகேயன் அவர் மனைவி ஆர்த்தி, படத்தின் காதாநாயகி ஆதிதீ சங்கர், நடிகர் விஜய் மனைவி சங்கீதா விஜய் உள்ளிட்டவர்கள் படம் பார்த்தனர். அதனை தொடர்து சிவகார்த்திகேயன் செய்தியாளர்களிடம் பேசினார்….