கோவளத்தில் பீச் வாலிபால் : 108 அணிகள் பங்கேற்பு

செங்கல்பட்டு மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சார்பில் கோவளத்தில் பள்ளி மாணவர்களுக்கு இடையே நடைபெறும் இரண்டுநாள் பீச் வாலிபால் போட்டியை முதன்மை கல்வி அலுவலர் சி.கற்பகம் துவக்கிவைத்தார். 40 மகளிர் 68 ஆடவர் அணிகள் என மொத்தம் 108 அணிகள் பங்கேற்ற நிலையில் ஜினியர், சீனியர் மற்றும் சூப்பர் சீனியர் என மூன்று பிரிவுகளில் ஆடவர், மகளிர் என தனித்தனியே நாக் அவுட் முறையில் போட்டிகள் நடைபெறுகிறது. கடற்கரை மணலில் நடைபெற்ற பீச் வாலிபால் போட்டியில் பங்கேற்ற அணிகள் […]
இதுவே எனது கடைசி உலகக் கோப்பை போட்டியாக இருக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் அணி வீரர் அஸ்வின் கூறினார்

உலகக் கோப்பைப் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டிருந்த சுழற்பந்து வீச்சாளர் அக்சர் பட்டேல், காயம் காரணமாக விலகினார். இதையடுத்து கடைசி நேரத்தில் அணிக்குள் கொண்டு வரப்பட்டார் 36 வயதான அஸ்வின். இந்நிலையில் நேற்று குவாஹாட்டியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: உண்மையை சொல்ல வேண்டும் என்றால், உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவேன் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை. எப்போதும் கிரிக்கெட்டை ரசித்து விளையாட வேண்டும் என்பதே கடந்த 5 ஆண்டுகளில் எனது தாரக மந்திரமாக உள்ளது. இந்த உலகக்கோப்பை […]