விமான சாகச நிகழ்ச்சிக்கான நேரத்தை தேர்வு செய்தது இந்திய விமானப்படை தான்

5 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு வருத்தமும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். கூட்ட நெரிசலால் யாரும் உயிரிழக்கவில்லை, வெயிலின் தாக்கத்தால் தான் உயிரிழப்பு ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம். மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பலனின்றி யாரும் உயிரிழக்கவில்லை. -அமைச்சர் மா.சுப்பிரமணியன் (அலட்சிய) பேட்டி
மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

2024-25ம் ஆண்டுகான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். தமிழ்நாட்டில் மருத்துவ படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு ஆக.21-ம் தேதி தொடங்குகிறது. தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.
தேமுதிகவின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் திரைக்கலைஞருமான கேப்டன் Vijayakant மறைவையொட்டி

இன்று சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெறவிருந்த ‘வைக்கம் போராட்டம் நூற்றாண்டு சிறப்பு விழா’வானது ரத்து செய்யப்பட்டு, சென்னை பெரியார் திடலில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்தில் ‘பெரியாரும் வைக்கம் போராட்டமும்’ நூல் வெளியீடு மற்றும் வைக்கம் போராட்ட நூற்றாண்டு மலர் வெளியீடு எளிய முறையில் நடைபெற்றது… இந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் M K Stalin அவர்கள் நூலினை வெளியிட கேரளா மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்…இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா […]
சட்டப்பேரவையில் கறம்பக்குடி மருத்துவமனை குறித்த அமைச்சர் பதிலுக்கு அதிமுகவினர் எதிர்ப்பு

கேள்வி நேரத்தில் அரசியல் ரீதியாக குற்றம் சாட்டக் கூடாது என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வாதம் அதிமுக ஆட்சியில் தரம் உயர்த்தப்பட்ட மருத்துவமனைகளில் வெறுமனே பெயர் பலகை மட்டுமே மாற்றப்பட்டது – அமைச்சர் மா.சுப்பிரமணியன் எந்த மருத்துவமனையில் அவ்வாறு செய்யப்பட்டது என்று கூறினால் விவாதம் நடத்த தயார் – விஜயபாஸ்கர் மருத்துவ பணி இடங்களை உருவாக்காமல்130 மருத்துவமனைகளை கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பாக தரம் உயர்த்தி உள்ளனர் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் 130 மருத்துவமனைகளின் பட்டியலை தருகிறேன், […]
டெங்கு போன்ற நோய்களை தடுக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது

அரசு மருத்துவமனைகளில் உயிர் காக்கும் கருவிகள் போதுமான அளவிற்கு உள்ளது. நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு போன்றவை அனைத்து சுகாதார நிலையங்களிலும் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் காலை 9.00 மணி அளவில் டெங்கு காய்ச்சலுக்கான சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. வடகிழக்கு பருவமழை எப்போது முடிவுக்கு வருகிறதோ, அதுவரை இந்த முகாம்கள் தொடர்ந்து நடைபெறும்- சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி.
முறைகேடு: ஓ.எஸ்.மணியன் மீது நடவடிக்கை?

நாகையில் கட்டப்பட்ட மருத்துவக் கல்லூரி விவகாரத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் முறைகேட்டில் ஈடுபட்டதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றம் சாட்டியுள்ளார். தனது சொந்த நிலத்தை நல்ல விலைக்கு விற்பனை செய்வதற்காக, தகுதியற்ற இடத்தில் மருத்துவக் கல்லூரி கட்டி மக்களின் நிதி விரயம் செய்யப்பட்டுள்ளதால், ஓ.எஸ்.மணியன் உள்ளிட்ட அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.