சென்னையில் தக்காளி விலை இருமடங்காக உயர்ந்துள்ளது

கடந்தவாரம் ரூ.35-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி இன்று ரூ.85-க்கு விற்பனையாகிறது. சென்னை கோயம்பேடு சந்தைக்கு வரத்து குறைவு காரணமாக தக்காளி விலை உயர்வு என வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி காய்கறி சந்தையில், மக்களவைத் தொகுதி வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
நாளை சென்னை மூர் மார்க்கெட் – அரக்கோணம், மூர் மார்க்கெட் – திருத்தணி, மூர் மார்க்கெட் – திருப்பதி வழித்தடத்தில் செல்லும் 9 மின்சார ரயில்கள் ரத்து

பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை சென்னை மூர் மார்க்கெட் – அரக்கோணம், மூர் மார்க்கெட் – திருத்தணி, மூர் மார்க்கெட் – திருப்பதி வழித்தடத்தில் செல்லும் 9 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு மொத்த மார்கெட்டில் 2019ம் ஆண்டு கடைகள் ஒதுக்கீடு டெண்டரில் மோசடி.

சி.எம்.டி.ஏ. கண்காணிப்பு பொறியாளர் ஸ்ரீனிவாச ராவ் உள்பட இருவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு. லஞ்சம் பெற்றுக்கொண்டு உணவகம் வைக்க ஒதுக்கப்பட்ட இடத்தை 11 சிறிய கடைகளாக பதிவு செய்து அரசுக்கு சுமார் ₹86 லட்சம் இழப்பை ஏற்படுத்தியதாக வழக்கு.