தாம்பரம் மாநகராட்சி கிழக்கு தாம்பரம் வார்டு & 48க்குட்பட்ட, வேளச்சேரி பிரதான சாலை, பூண்டி பஜார் பகுதியில் தூய்மையின் சேவைக்கான (Swachatta Hi Seva) விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட மாராத்தான் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்ற மாணவ / மாணவியர்களுக்கு

பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.கருணாநிதி, அவர்கள் மற்றும்மாநகராட்சி ஆணையர் திரு.சீ.பாலச்சந்தர்,இ.ஆ.ப., அவர்கள் பரிசுக் கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் மண்டலக்குழு தலைவர் திரு.சு.இந்திரன், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் உள்ளனர்.
நகராட்சி நிர்வாக இயக்குநர் திரு.சு.சிவராசு, இ.ஆ.ப., அவர்கள் தாம்பரம் மாநகராட்சி சிட்லபாக்கம் பகுதியில் அமைந்துள்ள MIT கல்லூரி வளாகத்தில் தூய்மையின் சேவைக்கான (Swachatta Hi Seva)விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்ட மாரத்தான் ஓட்டப்பந்தயத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்

இந்நிகழ்ச்சியில் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் திரு.சீ.பாலச்சந்தர், இ.ஆ.ப., பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.கருணாநிதி, மாநகராட்சிதுணை மேயர் திரு.கோ.காமராஜ், மண்டலக்குழு தலைவர்கள் திரு.வே.கருணாநிதி, திரு.ஜோசப் அண்ணாதுரை, மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
குரோம்பேட்டையில் உடல் உறுப்பு தானம் மராத்தான் போட்டி

நண்பர்கள் அர்ப்பண மன்றம் சார்பில் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக குரோம்பேட்டையில் 5 கி.மீ தூரம் மாரத்தான் போட்டி நடத்தியது. அதிகாலை முதல் திரண்ட ஆண்கள், பெண்கள் இருதரப்பிலும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துக்கொண்ட நிலையில் குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி உள்ளிட்டோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். ஜி.எஸ்.சாலை, சி.எல்.சி சாலை, பச்சைமலை, துர்கா நகர் வழியாக மீண்டும் குரோம்பேட்டை பேரூந்து நிலையம் […]