மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராக பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் தேர்வு; நாளை பதவியேற்க உள்ளார்.

மும்பையில் நடைபெற்ற பாஜகவின் மையக் குழுக் கூட்டத்தில் தேவேந்திர ஃபட்னாவிஸ் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் இருவரும் துணை முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல். மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் வெளியாகி 10 நாட்கள் ஆன பிறகு முதல்வர் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாஜக கூட்டணி கட்சிகளிடையே முதல்வர் பதவியை பிடிக்க கடும் போட்டி நிலவி வந்த நிலையில் பட்னாவிஸ் முதல்வராக தேர்வு..

ரத்தன் டாடா உடலுக்கு அரசு மரியாதை: மகாராஷ்டிரா முதல்வர்

மும்பை தேசிய மையத்தில் காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை ரத்தன் டாடாவின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்படும் என குடும்பத்தார் தகவல். ரத்தன் டாடாவின் உடலுக்கு அரசு மரியாதை தரப்படும் என்று மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு.

ரத்தன் டாடாவுக்கு ‘பாரத ரத்னா’ வழங்க வேண்டும் – மகாராஷ்டிரா அமைச்சரவை தீர்மானம்!

மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு நாட்டின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ வழங்க மத்திய அரசை வலியுறுத்தி மகாராஷ்டிரா அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது

மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது

அம்மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சரும் ஆன பசவராஜ் பாட்டில் இன்று காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார். நாளை அவர் பாரதிய ஜனதா கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் காங்கிரஸ் கட்சியிலிருந்து முன்னாள் முதலமைச்சர் அசோக் சவான் விலகி பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிராவில் 3.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

மகாராஷ்டிர மாநிலத்தின்ஹிங்கோலி பகுதியில் இன்று (நவம்பர் 20) லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. திங்கள்கிழமை அதிகாலை 5 மணியளவில் மகாராஷ்டிர மாநிலத்தின்ஹிங்கோலி பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஐந்து கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.5 ரிக்டர் எனப் பதிவாகியுள்ளது.

மகாராஷ்டிராவில் மராத்தாக்களுக்கு கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் 16 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது

இந்நிலையில், மராத்தாக்களுக்கு இட ஒதுக்கீடு கோரி அந்த சமூகத்தை சேர்ந்த மனோஜ் ஜராங்கே சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் அறிவித்துள்ளார். மராத்தாக்கள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளதை தொடர்ந்து, இவர்களுக்கு ஆதரவாக ஷிண்டே ஆதரவு சிவசேனா எம்பிக்கள் ஹேமந்த் பாட்டீல், ஹேமந்த் கோட்சே ஆகியோர் நேற்று திடீரென ராஜினாமா செய்தனர். போராட்டக்காரர்கள் தேசியவாத காங்கிரஸ் அலுவலகங்கள், பீட் தொகுதி எம்எல்ஏவின் வீட்டுக்கு தீ வைத்தனர்.