கலைஞர்‌ மகளிர்‌ உரிமைத்‌ திட்டம்‌ விண்ணப்பங்கள்‌ பதிவு செய்யும்‌ முகாமிற்கு மு.க.ஸ்டாலின்‌ ஆய்வு

முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ இன்று (27.7.2023) தஞ்சாவூர்‌ மாவட்டம்‌, பூதலூர்‌ ஒன்றியம்‌, மனையேறிப்பட்டி ஊராட்சியில்‌ நடைபெற்று வரும்‌ கலைஞர்‌ மகளிர்‌ உரிமைத்‌ திட்டம்‌ விண்ணப்பங்கள்‌ பதிவு செய்யும்‌ முகாமிற்கு நேரில்‌ சென்று, விண்ணப்பங்களை பதிவு செய்யும்‌ பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌. இந்த ஆய்வின்போது, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்‌ கே.என்‌.நேரு, பொதுப்பணித்‌துறை அமைச்சர்‌ எ.வ.வேலு, பள்ளிக்கல்வித்‌ துறை அமைச்சர்‌ அன்பில்‌ மகேஸ்‌ பொய்யாமொழி, தமிழ்நாடு அரசின்‌ தில்லி சிறப்புப்‌ பிரதிநிதி ஏ.கே.எஸ்‌.விஜயன்‌, சட்டமன்ற உறுப்பினர்கள்‌ டி.கே.ஜி. நீலமேகம்‌, துரை.சந்திரசேகரன்‌, […]

கலைஞர்‌ மகளிர்‌ உரிமைத்‌ திட்டத்திற்கான விண்ணப்பங்களை பதிவு செய்யும்‌ முகாம்‌

தாம்பரம்‌ மாநகராட்சி, பெருங்களத்தூர்‌ மண்டலத்திற்குட்பட்ட வள்ளுவர்‌ குருகுலம்‌ பள்ளியில்‌ நடைபெற்ற கலைஞர்‌ மகளிர்‌ உரிமைத்‌ திட்டத்திற்கான விண்ணப்பங்களை பதிவு செய்யும்‌ முகாமினை தாம்பரம்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ ஆர்‌.அழகுமீனா, (25.07.2023) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்‌.

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம்

தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கம் மண்டலத்திற்குட்பட்ட 38 வது வார்டு பத்மநாப நகர் கருமாரியம்மன் ஆலய கூடத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமை தாம்பரம் மாநகராட்சி 38 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சரண்யா மதுரை வீரன் பார்வையிட்ட போது எடுத்த படம் அருகில் திமுக நிர்வாகி சி.ஆர் மதுரை வீரன்

மணிப்பூர் கொடூரம் திமுக மகளிர் அணி கொட்டும் மழையில் பரிமளா சிட்டிபாபு தலைமையில் ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற கலவரம் மற்றும் பெண்களுக்கு எதிரான கொடுர தாக்குதலை தடுக்காத ஒன்றிய, மணிப்பூர் மாநில அரசுகளை கண்டித்து தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கத்தில் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பரிமளா சிட்டிபாபு தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் தாம்பரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் ரமணி ஆதிமூலம், கிரிஜா சந்திரன், சசிகலா கார்திக் உள்ளிட்ட திமுக மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்டவர்கள் கலந்துக்கொண்டு பாஜக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். அப்போது […]

மகளிருக்கு மாதந்தோறும்‌ ரூ.1000/- வழங்கிடும்‌ கலைஞர்‌ மகளிர்‌ உரிமைத்‌ திட்டம்‌

தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ இன்று (24.7.2023) தருமபுரி மாவட்டம்‌, தொப்பூர்‌ அரசு மேல்நிலைப்‌ பள்ளியில்‌ நடைபெற்ற விழாவில்‌, மகளிருக்கு மாதந்தோறும்‌ ரூ.1000/- வழங்கிடும்‌ கலைஞர்‌ மகளிர்‌ உரிமைத்‌ திட்டம்‌ விண்ணப்பங்களை பதிவு செய்யும்‌ முகாமை தொடங்கி வைத்து விழாப்‌ பேரூரையாற்றினார்‌. இந்நிகழ்ச்சியில்‌, நகராட்சி நிர்வாகத்‌ துறை அமைச்சர்‌ கே.என்‌.நேரு, வேளாண்மை -உழவர்‌ நலத்துறை அமைச்சர்‌ எம்‌.ஆர்‌.கே.பன்னீர்செல்வம்‌, நாடாளுமன்ற உறுப்பினர்‌ டி.என்‌.வி.எஸ்‌. செந்தில்குமார்‌, சட்டமன்ற உறுப்பினர்கள்‌ ஜி.கே. மணி, எஸ்‌.பி. வெங்கடேஸ்வரன்‌, தருமபுரி மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ கி.சாந்தி […]

தாம்பரம் மாநகராட்சி சிட்லபாக்கம் 43 வது வார்டில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்

தாம்பரம் மாநகராட்சி சிட்லபாக்கம் 43 வது வார்டில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் நமது மாமன்ற உறுப்பினர் சி.ஜெகன் விண்ணப்பத்தை பொதுமக்களுக்கு வழங்கிய போது உடன் இருந்தவர்கள் வெங்கடசாமி, மனோ, பார்த்தசாரதி, அருள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மகளிர் உரிமைத் தொகை எப்படி வழங்கப்படும்..? விண்ணப்ப நடைமுறை என்ன? முழு விவரம் இதோ…

மாத உரிமைத்தொகை பெற எந்தெந்த விண்ணப்பதாரர்களுக்கு தகுதி இருக்கிறது என்பது முடிவு செய்யப்படும். மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்காக நியாய விலைக் கடை முகாம்களில் பெண்கள் ஒரே நேரத்தில் அதிக அளவில் கூட்டமாக திரள்வதை தவிர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று தகுதியானவர்களுக்கு மட்டுமே உரிமைத் தொகை கிடைப்பதற்கும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதுகுறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். ஒவ்வொரு நியாய விலைக் கடைகளின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பெண்களில் எத்தனை பயனாளிகள் மகளிர் உரிமை தொகை […]