மதுரையில் இருந்து சென்னை நோக்கி அரசு எஸ்.இ.டிசி சொகுசு பஸ் கவிழ்ந்து விபத்து …

மதுரையில் இருந்து சென்னை நோக்கி அரசு எஸ்.இ.டிசி சொகுசு பேருந்தானது சென்று கொண்டிருந்தது. அப்பொழுது விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பாதிரி கிராமம் பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருக்கும்போது அதே மார்க்கமாக சென்ற கண்டெய்னர் லாரி ஒன்று அரசு பஸ் மீது மோதிவிட்டு அங்கிருந்து சென்றது. இதில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் சந்திரகாசன், காஞ்சிபுரம் மாவட்டம் இடையான்புதூர் பகுதியை சேர்ந்த நடத்துனர் […]
மதுரையில் ஆணி படுக்கையில் படுத்தவாறு 3 நிமிடத்தில் 80 கான்கிரீட் கற்களை உடைத்து பொறியாளர் கின்னஸ் சாதனை.!!

மதுரை சின்னசொக்கிகுளம் பகுதியைச் சேர்ந்த பொறியாளர் விஜய் நாராயணன், டேக்வாண்டோ மீதான ஈடுபாட்டால் தனது 23 வயதிலிருந்து தொடர்ந்து டேக்வாண்டோ கற்கத் தொடங்கியுள்ளார் இதையடுத்து டேக்வாண்டோவில் பல்வேறு கின்னஸ் சாதனைகளை நிகழ்த்தி வருகிறார். கடந்த சில ஆண்டுகளில் டேக்வாண்டோவில் பல்வேறு பிரிவுகளில் இதுவரை 29 கின்னஸ் சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். அதில் தற்போது ஆணி படுக்கையில் படுத்தபடி உடலுக்கு மேற்புறம் ஆணி படுக்கையை வைத்துக் கொண்டு 3 நிமிடத்தில் 80 கான்கிரீட் கற்களை உடைக்கும் கின்னஸ் சாதனையை நாராயணன் […]
மதுரை மீனாட்சியம்மன் கோவில் தக்காராக டிவிஎஸ் குழுமத்தை சேர்ந்த சோபனா ராமச்சந்திரன் நியமனம்.

ஸ்ரீ சக்கர டயர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான சோபனா இதுவரை தக்காராக இருந்த கரு முத்து கண்ணனுக்கு பதில் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் முதல் பெண் தக்கார் ஆவார்
சுப.உதயகுமாருக்கு எதிராக வழங்கிய லுக் அவுட் நோட்டீசை திரும்பப் பெற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

சுப.உதயகுமாருக்கு எதிராக வழங்கிய லுக் அவுட் நோட்டீசை திரும்பப் பெற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மனுதாரர் மீது நீதிமன்றங்களில் பிடிவாரண்ட் இல்லாததால் லுக் அவுட் நோட்டீசை திரும்பப் பெற கோர்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மதுரை சுற்றுலா ரயில் விபத்தில் பலி 10 ஆக உயர்வு

மதுரை சுற்றுலா ரயில் தீ விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்து விட்டது. இறந்தவர்கள் அனைவரும் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர்கள். அங்கிருந்து 60 பேர் ஆன்மிகப் பயணமாக வந்தனர். இவர்கள் திருவனந்த புரத்தில் சாமி கும்பிட்டு விட்டு அங்கிருந்து நேற்று அதிகாலையில் மதுரை வந்து சேர்ந்தனர். மதுரையில் அவர்கள் வந்த பெட்டி தனியாக கழற்றி விடப்பட்டது. அந்த பெட்டியில் உள்ளே பூட்டிக்கொண்டு சமைத்த போது தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது.எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தியதால் இந்த தீ […]
மதுரை சுற்றுலா ரெயில் தீ விபத்து – 10 பேர் பலி

உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து தென்னிந்தியாவில் சுவாமி தரிசனம் செய்வதற்காக 60க்கும் மேற்பட்டோர் ஆக்ஸ்ட் 17ஆம் தேதி யாத்திரைப் பயணிகள் ரெயில் மூலமாக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர். இவர்கள் நேற்று நாகர்கோயில் பத்மநாப சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு இன்று அதிகாலை மதுரை வந்தடைந்தனர். இவர்களின் ரெயில் பெட்டி மதுரை ரயில் நிலையத்திலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மதுரை போடி லயனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது அந்த நேரத்தில் ரெயில் பெட்டியில் இருந்த பக்தர்கள் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து குவாரி நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

70,000 லாரி அளவுக்கு கனிம வளங்கள் கொள்ளை போயுள்ளதாக நீதிபதிகள் வேதனை. கிராம நிர்வாக அலுவலர்கள் மீது ஏன் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக் கூடாது என நீதிபதிகள் கேள்வி. புதுக்கோட்டை லெம்பலக் குடியில் சட்ட விரோதமாக கல் குவாரி நடத்துவோர் மீது நடவடிக்கை கோரிய பொது நல வழக்கில் நீதிபதிகள் உத்தரவு.
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மதுரையில் திமுகவினரின் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது

நீட் தேர்வை ரத்துசெய்ய வலியுறுத்தி மதுரையில் திமுகவினரின் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. மதுரை அண்ணாநகரில் அம்பிகா திரையரங்கம் அருகே திமுகவினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். அமைச்சர் மூர்த்தி, மாவட்ட செயலாளர் தளபதி, திமுக இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
மதுரை அதிமுக எழுச்சி மாநாட்டின் சிறப்புகள் என்னென்ன?
தமிழகம் மதுரையில் ஆகஸ்ட் 20ல் அதிமுக மாநாடு; எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போஸ்டர்கள்: அதிமுகவினர் கலக்கம்

மதுரை: மதுரை முழுவதும் பல்வேறு இடங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. வரும் 20ம் தேதி மதுரையில் அதிமுகவின் மாபெரும் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு அதிமுகவின் மிக முக்கியமான மாநாடாக கருதப்படுகிறது. பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையே அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு மிகபெரிய மாநாட்டை எடப்பாடி தரப்பினர் நடத்த உள்ளனர். இந்த மாநாட்டிற்கு ஆரம்பத்திலிருந்தே பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியுள்ளது. தென்மாவட்டத்தில் பெரும்பான்மையான சமூகத்தினர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பல்வேறு போஸ்டர்களை […]