மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில் தலையிட முடியாது – உச்ச நீதிமன்றம் கறார்

மதுரை எம்ய்ஸ் விவகாரம் தொடர்பான வழக்கில் எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2018 -ம் ஆண்டு ஜூன் மாதம் மதுரை மாவட்டம், தோப்பூரில் 224.24 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,264 கோடி மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. ஆனால், நிலம் ஒதுக்கீட்டில் கால தாமதம் ஏற்பட்டது. தமிழகத்தில் அமைய உள்ள மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனம் கடன் வழங்க முன்வந்தது. அதற்கான […]
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் லட்ச தீபம் விளக்கு ஒளியில் ஜொலித்த பொற்றாமரைக்குளம்

மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் திருக்கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு நேற்று லட்ச தீபம் ஏற்றப்பட்டது. இதில் பொற்றாமரைக்குளம் உள்பட கோயில் வளாகம் முழுவதும் விளக்கு ஒளியில் ஜொலித்தது. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் திருக்கார்த்திகை திருவிழா நவ. 21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தினமும் காலை மற்றும் மாலையில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர், பஞ்சமூர்த்திகளுடன் ஆடி வீதிகளில் எழுந்தருளினர். திருக்கார்த்திகையின் ஆறாம் நாளான்று கோயில் பொற்றாமரைக்குளம், அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி, உள்பிரகாரங்கள் […]
மதுரை கள்ளழகர் கோயில் ராஜகோபுரம் கும்பாபிஷேகம் கோலாகலம்

யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனிதநீர் ராஜகோபுர கலசங்களில் ஊற்றப்பட்டது ஏராளமான பக்தர்கள் குவிந்ததால், அனைவரும் விழாவை காண தடுப்புகள் அமைத்து ஏற்பாடு 120 அடி உயரம் கொண்ட ராஜகோபுரத்தில் ரூ.2 கோடி மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன கடுக்காய், சுண்ணாம்பு, பனங்கற்கண்டு ஆகிய பொருட்களை கொண்டு புனரமைப்பு
வைகை அணையில் இருந்து மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது

சிறப்பு பூஜைகளுக்குப் பின் தேனி மாவட்ட ஆட்சியா சஜீவனா, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, திண்டுக்கல் ஆட்சியர் பூங்கொடி, முன்னிலையில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் பாசன நீரை திறந்து விட்டனர்.
மதுரையில் ஆட்டோ ஓட்டுநர் கொலை!
மதுரையில் பயணிகளை ஏற்றுவதில் ஆட்டோ ஓட்டுநர்கள் இடையே ஏற்பட்ட மோதல் கொலையில் முடிந்த கொடூரம்! ஆட்டோ ஓட்டுநர் மணிகண்டன் என்பவரை கல்லால் அடித்துக்கொன்ற வழக்கில் சக ஆட்டோ ஓட்டுநர்களான நாகராஜ், சூரிய பிரகாஷ் ஆகிய இருவரும் கைது!
தென்னக ரயில்வேக்கு உட்பட்ட சென்னையில் இருந்து மதுரை வழியாகக் கேரள மாநிலம் குருவாயூருக்கு எக்ஸ்பிரஸ் ரயில் தினமும் இயக்கப்படுகிறது

தற்போது திருவனந்தபுரம் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தண்டவாளங்களில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.16127) வருகிற 15-ந் தேதி முதல் 20-ந் தேதி வரையும், 22-ந் தேதி முதல் 27-ந் தேதி வரையும், 29 மற்றும் 30-ந் தேதிகளில் சென்னையில் இருந்து எர்ணாகுளம் வரை மட்டும் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த கண்மணி மற்றும் கீதா ஆகியோர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 சார்பில் 7,301 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த 30.3.2022ல் வெளியானது. 24.7.2022ல் எழுத்துத்தேர்வு நடந்தது. 18 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினர். பின்னர் காலியிடம் 10,117 ஆக உயர்த்தப்பட்டது. நாங்கள் இந்த தேர்வில் பங்கேற்றோம். கடந்த மார்ச்சில் தேர்வு முடிவுகள் வெளியானது. இதில், எங்கள் பெயர் இல்லை. நாங்கள் 255 மதிப்பெண்களுக்கு மேல் பெற வாய்ப்புள்ளது. தற்போது குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்து வருகிறது. குரூப்-4 தேர்வில் […]
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே முகமது தாஜுதீன் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே முகமது தாஜுதீன் என்பவர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.போலி ஆவணங்களை அளித்து பாஸ்போர்ட் வாங்கிய விவகாரத்தில் சோதனை நடந்து வருவதாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை காஜிமார் தெருவில் உள்ள முகமது தாஜிதின் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை

முகமது தாஜிதின் தலைமறைவாக உள்ள நிலையில் அவரது சகோதரர் உஸ்மான்காலித் வீட்டிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை. ஹைதராபாத், லக்னோ வெடிகுண்டு தாக்குதல், போலி பாஸ்போர்ட் குறித்தும் விசாரணை!
சந்திர கிரகணத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வரும் 26ம் தேதி நடை அடைப்பு!