போத்தீஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை:
சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு முக்கிய நகரங்களில் உள்ள புகழ்பெற்ற போத்தீஸ் ஜவுளிக்கடை நிறுவனத்துக்குச் சொந்தமான 10க்கும் மேற்பட்ட இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு புகார்கள் தொடர்பாக இந்தச் சோதனைகள் நடத்தப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள போத்தீஸ் நிறுவனத்தின் உரிமையாளர்களான போத்தி ராஜா மற்றும் அசோக் ஆகியோரின் இல்லங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை […]
மதுரையில் TVKமாநில மாநாடு: பிற்பகல் 2 மணி நிலவரப்படி 2 லட்சம் பேர் வெயிலையும் பொருட்படுத்தாமல் மாநாட்டு திடலில் அமர்வு
விஜய் மாநாட்டை மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் 3 மணிக்கு விஜய் அவருக்காக அமைக்கப்பட்டுள்ள நடைமேடையில் ரேம்ப் வாக் வருவதாகவும், பிறகு புஸ்ஸி ஆனந்த் 4 மணியளவிலும், அதனை தொடர்ந்து ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட நிர்வாகிகள் பேசுவதாகவும் தெரிகிறது. இதையடுத்து 5 மணியளவில் விஜய் தனது உரையை தொடங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நடந்த மாநாட்டில் விஜய்யின் பேச்சுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், […]
மதுரை மாநகராட்சி நிதி முறைகேடு புகார் – மேலும் இருவர் கைது
மதுரை மாநகராட்சியில் ரூ.200 கோடி அளவில் நிதி முறைகேடு புகார் – மேலும் இருவர் கைது, புகார் தொடர்பாக இதுவரை 12 பேர் கைது திமுக கவுன்சிலரின் கணவர் கண்ணன், ஒப்பந்த ஊழியர் செந்தில்பாண்டி ஆகியோர் கைது, போலீசார் தீவிர விசாரணை
மதுரை ஆதீனத்தை விசாரிக்க வானதி சீனிவாசன் எதிர்ப்பு
மதுரை ஆதீனம் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது .அவர் உடல் நல குறைவு காரணமாக படுக்கையில் இருக்கிறார் .இந்த நிலையிலும் விசாரணை நடந்து வருகிறது .இதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுபற்றி வானதி சீனிவாசன் கூறியதாவது:-வயது முதிர்ந்த, உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள மதுரை ஆதீனத்தை எப்படியாவது கைது செய்து, கொடுமைப்படுத்த வேண்டும் என்பதில் திமுக அரசு உறுதியாக இருப்பது தெரிகிறது. அவுரங்கசீப் ஆட்சி காலத்தில் கூட நடக்காத கொடுமைகள் எல்லாம், திமுக ஆட்சியில் நடக்கிறது. […]
ஜனவரி முதல் மதுரையில் எய்ம்ஸ் கல்லூரி செயல்படும்.
மறுரையில் 2026 ஜனவரி மாதம் முதல் புதிய கட்டிடத்தில் கல்லூரி செயல்படும். ஜனவரிக்குள் ஆய்வகங்கள், கல்லூரியில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கான வசதிகள் மற்றும் 150 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை உள்ளிட்டவை அமைக்கப்படும். 2027-க்குள் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் நிறைவுபெற்று, முழுமையாக செயல்படத் தொடங்கும் என்று அதன் நிர்வாக அதிகாரி கூறினார்.
இந்து முன்னணி மாநாட்டில் அறுபடை வீடுகள் காட்சி .
மதுரை பாண்டி கோயில் அருகே அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு ஜூன் 22-ல் நடைபெறுகிறது. இதையொட்டி மாநாட்டு வளாகத்தில் முருகனின் அறுபடை வீடுகளின் மாதிரிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மாதிரி அறுபடை வீடுகளை புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நேற்று திறந்து வைத்தார்.இதனை பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர் ஆறு கோடி வீடுகளில் மூலவர் அப்படியே காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறார். இது அனைவரையும் கவர்ந்துள்ளது
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் -அமித்ஷா உறுதி
மதுரையில் நடந்த பாஜக மாநாட்டில் மத்திய மந்திரி அமித்ஷா பேசியதாவது 2025 ம்ஆண்டு மிகப்பெரிய சாதனை படைத்தோம். டெல்லியில் கெஜ்ரிவால் ஆட்சியை முடித்து, 27 ஆண்டுக்கு பிறகுெல்லியில் பா.ஜ.க, ஆட்சி அமைத்து உள்ளது. 2025 ல் டெல்லியில் எப்படி ஆட்சி அமைத்தோமோ, 2026ல் தமிழ்நாட்டி ஆட்சி அமைப்போம். 2026 ல் நடக்கும் தேர்தலில் தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைக்கும் என்பதை உறுதியாக தெரிவித்து கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார் இந்த கூட்டத்திற்கு அண்ணாமலை […]
அழகர் ஆற்றில் இறங்கினார் மதுரை குலுங்கியது
சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி இன்று காலை 6 மணி அளவில் நடைபெற்றது பச்சை பட்டு உடுத்தி அழகர் தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்து பக்தி முழக்கமிட்டனர்.ஆழமான பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சி அடித்தனர்.பக்தர்கள் கூட்டத்தால் மதுரை குலுங்கியது
குண்டோதரர்களுக்கு விருந்து
மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ சுந்தரர் மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் வைபவம் முடிந்து குண்டோதரர்களுக்கு விருந்து படைத்தல்வைபவம் நடைபெற்றது இதில் பெரிய இலையில் உணவுகள் படைக்கப்பட்டு இருப்பதை பக்தர்கள் திரளாக கண்டுகளித்தனர்
மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் பக்தர்கள் பரவசம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவின் பத்தாம் நாளான இன்று (மே.8) காலையில் மீனாட்சி சுந்தரேசுவரருக்கு திருக்கல்யாணம் காலை 8.51 மணியளவில் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். திருமணமான பெண்கள் புதுத்தாலி அணிந்து கொண்டனர்அதற்கு முன்பாக அதிகாலை 4 மணியளவில் வெள்ளி சிம்மாசனத்தில் மீனாட்சி அம்மன் பிரியாவிடை சுந்தரேசுவரர் நான்கு மாசி வீதீகளில் எழுந்தருளினர்.