லாஸ் ஏஞ்சல்சில் 2028ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்ப்பு

கிரிக்கெட், ஸ்குவாஷ் உள்பட 5 போட்டிகளை சேர்ப்பதாக ஒலிம்பிக் ஒருங்கிணைப்பு குழு அறிவிப்பு 1900ம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் கடைசியாக கிரிக்கெட் விளையாடப்பட்டது. 128 ஆண்டுகள் கழித்து ஒலிம்பிக்கில் டி20 கிரிக்கெட் விளையாடப்பட உள்ளது. பேஸ்பால், ஃபிளாக் கால்பந்து, ஸ்குவாஷ், லாக்ரோஸ் ஆகிய விளையாட்டுகளும் சேர்ப்பு
ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டை சேர்க்க பரிந்துரை

2028 ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் விளையாட்டை சேர்க்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் ஏற்பாட்டு கமிட்டி பரிந்துரை அளித்துள்ளது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஒப்புதல் தந்தால் 2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் விளையாட்டு இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
2028ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில், கிரிக்கெட்டும் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

பேஸ்பால், சாஃப்ட்பால், ஸ்குவாஸ் உள்ளிட்ட போட்டிகளும் சேர்க்கப்படவுள்ளன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.