கார் விபத்தில் எல்ஐசி எஜெண்டு பலி

போரூர் பகுதியை சேர்ந்தவர் சேவியர் (69) எல்.ஐ.சி ஏஜெண்டாக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு காரில் தனது நண்பர்களுடன் செங்கல்பட்டு மாவட்டம் படாளம் பகுதிக்கு வந்துள்ளனர். காரை சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த ஓட்டுனர் மலையானம் (36) ஓட்டி வந்துள்ளார். பின்பு மீண்டும் நேற்று மாலை தாம்பரம் – மதுரவாயல் புறவழிசாலை வழியாக வீடு திரும்பி கொண்டிருந்த போது அனாகாபுத்தூர் அருகே அரசு பேருந்து முந்தி செல்ல முயன்ற போது சாலையோரம் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியின் […]

கர்நாடகாவிற்கு நாளை லாரிகளை இயக்க வேண்டாம்

காவிரி பிரச்னை தொடர்பாக கர்நாடகாவில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெறவுள்ள நிலையில் உத்தரவு; வடமாநிலங்களுக்குச் சென்று திரும்பும் லாரிகளை பாதுகாப்பாக நிறுத்திவைக்க வேண்டும் தமிழ்நாடு லாரி மற்றும் லாரி ஓட்டுநர்களுக்கு கர்நாடக அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவுறுத்தல்

ஆந்திராவுக்கு லாரியில் கடத்த முயன்ற 50 டன் ரேசன் அரிசி பறிமுதல்

திருவள்ளூர்:சோழவரம் பகுதியில் இருந்து ஆந்திர மாநிலம், நகரிக்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபாஸ் கல்யாண் உத்தரவின் பேரில் திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் இன்று காலை திருவள்ளூர் காமராஜர் சிலை அருகே கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது 2 லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்தபோது அதில் 50 டன் ரேசன் அரிசி ஆந்திராவுக்கு கடத்தி சென்றது தெரியவந்தது. […]

தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி 10 வயது சிறுமி உயிரிழப்பு

சென்னை: கோவிலாம்பாக்கத்தில் தாய் கீர்த்தியுடன் பள்ளிக்கு செல்லும் போது, கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக சற்று தடுமாறி இரு சக்கரவாகனம் கீழே விழுந்தபோது, வேகமாக பின்னால் வந்த தண்ணீர் லாரி சிறுமியின் மீது ஏறியது. அப்பகுதியில் சட்டவிரோதமாக தண்ணீர் எடுக்கும் லாரிகள், போக்குவரத்து விதிகளை சிறிதும் மதிக்காமல் அதிவேகத்தில் செல்வதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

சென்னை வேலப்பன்சாவடியில் இன்று அதிகாலை, பேருந்து-லாரி ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில், 2 வாகனங்களும் தீப்பிடித்து எரியத் தொடங்கியதால் பரபரப்பு!

கர்நாடகாவில் இருந்து கோயம்பேடு நோக்கி வந்த A/C பேருந்து வேலப்பன்சாவடி சந்திப்பில் லாரி மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. பேருந்தில் இருந்த 22 பயணிகளும் பின் பக்க கண்ணாடியை உடைத்து இறங்கியதால் உயிர் தப்பினர். பூவிருந்தவல்லி, மதுரவாயல் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை அனைத்து வருகின்றனர். விபத்து காரணமாகச் சென்னை-பெங்களூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்.