பல்லாவரம் அருகே குப்பை கொட்ட வந்த லாரி தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு!
சென்னை, பல்லாவரம் அருகே சாலையோரம் குப்பை கொட்ட வந்த லாரி திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரம் – மதுரவாயல் புறவழிச்சாலையில், சங்கர் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விஷ்வேசபுரம் பகுதியில் குப்பை கொட்டும் இடம் உள்ளது. இன்று காலை, நாகல்கேணி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்திலிருந்து குப்பை கழிவுகளை ஏற்றிச் சென்ற லாரி திடீரென பழுதடைந்து சாலையோரம் நின்றது. அப்போது, அங்கிருந்த குப்பைகளில் எரிந்து கொண்டிருந்த நெருப்பு லாரியில் உள்ள குப்பைகளிலும் பற்றிக் […]