சென்னையில் தாறுமாறாக ஓடிய குடிநீர் லாரி மோதி இரண்டு பேர் பலி
திருவேற்காடு அடுத்த சுந்தரசோழபுரத்தைச் சேர்ந்த தேவி( 40) மற்றும் கிருஷ்ணன் (52) ஆகிய இருவர் காயமடைந்தனர். தொடர்ந்து, அந்த லாரி, மற்ற இரு சக்கர வாகனங்கள், கார்களை இடித்து தள்ளிவிட்டு சாலையோரம் இருந்த மின்கம்பத்தின் மீது மோதி நின்றது. இதனால், மின் கம்பம் மற்றும் மின்சார கம்பிகள் கீழே சாய்ந்தன. இச்சம்பவத்தில், சாலையில் நடந்து சென்ற, சேலத்தைச் சேர்ந்த கட்டுமான தொழிலாளியான தனபால் (25) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.