வீட்டுப் பத்திரத்தை வழங்காத வங்கிக்கு அபராதம்

திண்டுக்கல்: வீட்டுக்கடனை முழுமையாக கட்டி முடித்தும் வீட்டின் பத்திரத்தை வழங்காத ICICI வங்கிக்கு ரூ.2.29 லட்சம் அபராதம் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர் சேகரன் (71), 2004ல் கடனாக பெற்ற ரூ.2.25 லட்சத்தை கட்டி முடித்தும் பல ஆண்டுகளாக முறையீடு செய்தும் பத்திரங்கள் வழங்கவில்லை. இதனால் 2024ல் நுகர்வோர் நீதிமன்றத்தில் முறையிட்டார்

கடனை வசூலிக்க டார்ச்சர் செய்தால் 10 ஆண்டுகள் சிறை, ரூ.5 லட்சம் அபராதம் – கர்நாடகா அரசு அதிரடி சட்டம்.

கடன் வாங்கியோரை, கடன் கேட்டு டார்ச்சர் செய்தால், 10 ஆண்டுகள் சிறை மற்றும் 5 லட்சம் அபராதம், நிலுவையில் உள்ள கடன் வட்டியுடன் தள்ளுபடி செய்யப்படும் என கர்நாடக அரசு அவசர சட்டம் கொண்டு வந்ததுவங்கிகள் மற்றும் கடன் வழங்கும் நிறுவனத்திடம் கடன் பெற்றவர்கள் அந்த கடனை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் கட்ட முடியவில்லை என்றால், ஒரு கட்டத்திற்கு மேல் கடன் பெற்றவர்களை தொடர்பு கொண்டு,கடனை உடனடியாக திருப்பி செலுத்தும்படி நிறுவனத்தால் வற்புறுத்தப்படுவார்கள்குறிப்பாக கிரெடிட் கார்டு மற்றும் கடன் […]

காரில் விஷம் குடித்து 5 பேர் தற்கொலை: கடன் தொல்லையால் குடும்பமே உயிரிழந்த சோகம்; உருக்கமான கடிதம் சிக்கியது

திருமயம்: புதுக்கோட்டை அருகே காரில் அமர்ந்தபடி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். சேலத்தை சேர்ந்த இவர்கள், கடன் தொல்லை காரணமாக இந்த விபரீத முடிவை எடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம், திருச்சி – காரைக்குடி பைபாஸ் சாலையோரம் உள்ள நகர சிவ மடம் எதிரே நேற்றுமுன்தினம் இரவு முதல் ஒரு கார் நின்றிருந்தது. நேற்று காலை 7.30 மணியளவில் சிவமடத்தின் வாட்ச்மேன் அடைக்கலம் (70), அந்த காருக்கு அருகே […]

கார் கடனை கட்ட தவறிய தொழிலதிபர் மீது நிதி நிறுவனத்தினர் தாக்குதல்

கார் மாதத் தவணை கட்ட தாமதமானதால் தொழிலதிபரை தாக்கிய தனியார் பைனான்ஸ் நிறுவன ஊழியர் பைனான்ஸ் நிறுவனத்தை தமிழ்நாடு கட்டுமான இயந்திர உரிமையாளர்கள் சங்கத்தினர் முற்றுகை சேலையூரை சேர்ந்தவர் ஆனந்தன் (43).இவர் எர்த் மூவர்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.இவர் தாம்பரத்தில் உள்ள சோழமண்டலம் பைனான்சியல் லோன் பெற்று கார் ஒன்று வாங்கியுள்ளார்.இந்நிலையில் ஒரு மாத தவணை கட்டவில்லை என வீட்டிற்கு வந்த பைனான்ஸ் நிறுவன ஊழியர் ஆனந்தனை தாக்கியுள்ளார். இதில் ஆனந்தனின் காது ஜவ்வு கிழிந்ததாகவும் கூறப்படுகிறது.இதுகுறித்து […]

வருமான வரிச் சட்டம், 1961-ன் பிரிவு 269 SS விதியின்படி, எந்த நபரும் 20,000 ரூபாய்க்கு மேல் கடன் தொகையை ரொக்கப் பணமாகப் பெற முடியாது

இந்திய ரிசர்வ் வங்கி கடன் விஷயத்தில் தொடர்ச்சியான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்தவகையில் வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் (NBFCs) ரொக்கமாகக் கடன் அளிக்கும் வரம்புகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, இந்நிறுவனங்கள் ரூ.20,000-க்கு மேல் வாடிக்கையாளர்களுக்கு கடன் தொகையை ரொக்கமாக வழங்கக் கூடாது என்று கூறியுள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வாங்கி அனைத்து வங்கியல்லாத நிதி நிறுவனங்களுக்கும் மே 8-ம் தேதியன்று கடிதம் அனுப்பியுள்ளது. ரொக்கப் பரிமாற்றத்தில் வருமான வரி விதிகளைக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி […]

பெண்களுக்கு ரூ. 50 ஆயிரம்.. மத்திய அரசு தகவல்

உணவு கேட்டரிங் தொழில் தொடங்க விரும்பும் பெண்களுக்காக அன்னபூர்ணா யோஜனா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் ரூ.50 ஆயிரம் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இவற்றின் மூலம் சமையல் உபகரணங்கள், குளிர்சாதனப்பெட்டி, எரிவாயு இணைப்பு, சாப்பாட்டு மேஜைகள் வாங்கலாம். இந்தக் கடன்களின் வட்டி விகிதங்கள் சந்தையைப் பொறுத்து மாறுபடும். கடன் தொகையை மூன்று ஆண்டுகளுக்குள் திருப்பி செலுத்த வேண்டும். எஸ்பிஐ கிளையைத் தொடர்பு கொண்டு பெண்கள் இந்தக் கடனைப் பெறலாம்.

மருத்துவக் கல்லூரி மாணவா்களுக்கு கல்விக்கடன் பெற அழைப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பயிலும் மருத்துவக் கல்லூரி மாணவா்கள் எளிய முறையில் கல்விக்கடன் பெறலாம் என கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் பூவதி தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி உள்பட அனைத்து கல்லூரி மாணவா்களுக்கும் கல்விக்கடன் கிடைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. தற்போது, கல்விக் கடனிலிருந்த பல்வேறு இடா்பாடுகள் நீக்கப்பட்டு எளிமையாக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிகழாண்டில் 50,000 மாணவா்களுக்கு கல்விக்கடன் கிடைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டள்ளது. கல்விக் […]