குரோம்பேட்டை யூனிட்டி அரிமா சங்கம் சார்பாக நடைபெற்ற மருத்துவ சிகிச்சை முகாமில் மாவட்ட அரிமா ஆளுநர் ஏ.டி.ரவிச்சந்திர ஆதித்தன் கலந்துகொண்டார்

உடன் அரிமா சங்க நிர்வாகிகள் எம்.ஜெயபால், கே.எம்.ஜே.அசோக், சுந்தர்ராமன், எம்.ஐ.டி.விஜய், சேதுராமன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

குரோம்பேட்டை நியூ காலனி பகுதியில் மத்திய அஸ்தினாபுரம் அரிமா சங்கம் சார்பில் மரம் நடும் விழா சிறப்பாக நடைபெற்றது

இந்த விழாவில் மாவட்டத்தின் ஆளுநர் ஏ.டி ரவிச்சந்திர ஆதித்தன் நிவிஜி கே.எம்.ஜே. அசோக், வட்டாரத் தலைவர் ராஜமாணிக்கம், மாவட்ட கவுன்சிலர் கே.சந்திரசேகர், மாவட்டத் தலைவர்கள் எம்.ஜெயபால், எல்.ஹரிகுமார், சங்கத்தின் தலைவர் ஆர்.வி சங்கர், செயலாளர் ஏ.செந்தில்குமார், உறுப்பினர்கள் வீரப்பன், சதீஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த சேவை திட்ட ஏற்பாடுகளை சங்கத்தின் உறுப்பினர்கள் சிங்கதுரை, ஆனந்தராஜ் சுந்தரம் ஆகியோர் செய்து இருந்தனர்.

சென்னை சென்ட்ரல் சிட்லபாக்கம் லயன் சங்கம் சார்பாக தலைவர் புகழேந்தி தலைமையில் 324L மாவட்டம் முன்னாள் உடனடி ஆளுநர் சி.ஜெகன் ஏற்பாட்டில்

பரிமளா சிட்டிபாபு, பா.பிரதாப், சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சிட்லபாக்கம் கலைவாணர் பூங்கா மற்றும் கோவிலுக்கு சொந்தமான காலி இடம் மேலும் முக்கிய தெரு ஓரங்களில் 50 மரக்கன்றுகள் நடப்பட்டன. மரக்கன்றுகளை சுற்றி இரும்பு கம்பிகளிலான வேலிகளை உடனடியாக வைத்து பாதுகாப்புடன் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கண் பரிசோதனை முகாம்

மத்திய அஸ்தினாபுரம் அரிமா சங்கம், பம்மல் சங்கரா கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் குரோம்பேட்டை ராதா நகர் செயின்ட் மார்க்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் நடந்தது. அரிமா சங்க தலைவர் ராஜமாணிக்கம் தலைமையில் இ.கருணாநிதி எம்எல்ஏ முகாமை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் தலைவர் எம்.ஜெயபால், அரிமா சங்க நிர்வாகிகள் கே.எம்.ஜே அசோக், ஆர்.மோகன், காஞ்சி கணேசன், அழகப்பன், கஜேந்திரன், நாகராஜன், ஹரிகுமார் பொருளாளர் சங்கர் செயலாளர் சதீஷ்குமார் முகாம் ஏற்பாடுகளை செய்தனர்.

மத்திய அஸ்தினாபுரம் அரிமா சங்கம் சார்பாக உலக நீரழிவு தினத்தை முன்னிட்டு இலவச நீரழிவு மருத்துவ முகாம்

நேரு நகர் குமரன் குன்றம் முதியோர் இல்லத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 50&க்கும் மேற்பட்ட முதியோர்கள் பரிசோதனை செய்து பலன் பெற்றனர். இந்நிகழ்ச்சியில் தலைவர் இ.ராஜமாணிக்கம் கே.எம்.ஜே.அசோக், வி.ஆர்.அழகப்பன், இ.சதீஷ்குமார், ஆர்.வி.சங்கர், ஹரிகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

லயன் ஜெயராஜ் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி

லயன் ஜெயராஜ் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மத்திய அஸ்தினாபுரம் அரிமா சங்க முன்னாள் தலைவர் ஜெயபால், காஞ்சி கணேசன், சதீஷ்குமார், அழகப்பன் எம்.பாலாஜி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

லயன் அழகப்பன் பேரனின் பிறந்த நாள்

தாம்பரம் சக்தி சாரதா பீடத்தில் லயன் அழகப்பன் பேரனின் பிறந்த நாளை முன்னிட்டு மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இதில் மத்திய அஸ்தினாபுரம் அரிமா சங்கத்தின் முன்னாள் தலைவர் எம்.ஜெயபால் ஒருங்கிணைப்பாளர் கே.எம்.ஜே அசோக் செயலாளர் சதீஷ் குமார் மற்றும் உறுப்பினர்கள் காஞ்சி கணேசன், அழகப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மத்திய அஸ்தினாபுரம் அரிமா சங்க தலைவராக லயன் இ.ராஜமாணிக்கம் பொறுப்பேற்பு

மத்திய அஸ்தினாபுரம் அரிமா சங்க கூட்டம் ராதா நகர் மெயின் ரோட்டில் உள்ள சுபிக்‌ஷா மகாலில் நடைபெற்றது. இதில் புதியதாக மத்திய அஸ்தினாபுரம் அரிமா சங்க தலைவராக லயன்.இ.ராஜமாணிக்கம், செயலாளராக லயன்.இ.சதிஷ்குமார், பொருளாளராக லயன்.ஆர்.வி சங்கர் மற்றும் புதிய உறுப்பினர்கள் பதவியேற்றனர். இந்த பதவியேற்பு விழாவில் முதல் துணை மாவட்ட ஆளுநர் லயன்.ஏ.டி.ரவிச்சந்திரன், இரண்டாம் துணை மாவட்ட ஆளுநர் லயன்.பி.மணிசங்கர் ஆகியோர் முறைப்படி பதவியேற்பு மற்றும் உறுதிமொழியேற்கும் நிகழ்ச்சிகளை மேற்கொண்டனர். அப்போது இ.ராஜமாணிக்கம் அவர் துணைவியார் இருவருக்கும் […]