தென்காசியில் உலா வந்த சிங்கம்?

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பெட்ரோல் பங்க் ஒன்றில் சிங்கம் உலா வந்ததாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலான நிலையில், அந்த காட்சிகள் தென்காசியில் எடுக்கப்பட்டது இல்லை என வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. வீடியோவில் வரும் விளம்பர பலகைகளில் வடமொழி எழுத்துக்கள் இருப்பதால், அது தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டது இல்லை என தகவல் பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் எனவும், இதுபோன்ற வதந்திகளை பரப்புவோர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேற்கு வங்க சரணாலயத்தில் உள்ள அக்பர், சீதா ஆகிய சிங்கங்களின் பெயரை மாற்றுமாறு மாநில அரசுக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவு

விலங்குகளுக்கு வைக்கப்படும் பெயர் இந்து, கிறிஸ்தவர், இஸ்லாமியர் உள்ளிட்ட எந்த மதத்தையும் சார்ந்த பெயரை வைக்கவேண்டாம் எனவும் அறிவுறுத்தல்

மத்திய அஸ்தினாபுரம் அரிமா சங்க தலைவராக லயன் இ.ராஜமாணிக்கம் பொறுப்பேற்பு

மத்திய அஸ்தினாபுரம் அரிமா சங்க கூட்டம் ராதா நகர் மெயின் ரோட்டில் உள்ள சுபிக்‌ஷா மகாலில் நடைபெற்றது. இதில் புதியதாக மத்திய அஸ்தினாபுரம் அரிமா சங்க தலைவராக லயன்.இ.ராஜமாணிக்கம், செயலாளராக லயன்.இ.சதிஷ்குமார், பொருளாளராக லயன்.ஆர்.வி சங்கர் மற்றும் புதிய உறுப்பினர்கள் பதவியேற்றனர். இந்த பதவியேற்பு விழாவில் முதல் துணை மாவட்ட ஆளுநர் லயன்.ஏ.டி.ரவிச்சந்திரன், இரண்டாம் துணை மாவட்ட ஆளுநர் லயன்.பி.மணிசங்கர் ஆகியோர் முறைப்படி பதவியேற்பு மற்றும் உறுதிமொழியேற்கும் நிகழ்ச்சிகளை மேற்கொண்டனர். அப்போது இ.ராஜமாணிக்கம் அவர் துணைவியார் இருவருக்கும் […]