எம்.எல்.ஏ., அமைச்சர் பதவியை உடனே இழந்த பொன்முடி: யார் இந்த லில்லி தாமஸ்?

அமைச்சர் பொன்முடி தனது எம்.எல்.ஏ., அமைச்சர் பதவியை இழக்க காரணமான மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் உட்பிரிவை நீக்கி உத்தரவை பெற்றவர் லில்லி தாமஸ் தமிழ்நாட்டின் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதால், தனது எம்.எல்.ஏ., அமைச்சர் பதவியை உடனடியாக இழந்துள்ளார். இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்காக 30 நாட்கள் அவகாசம் அளித்து தண்டனையை நிறுத்தி வைத்தும் உத்தரவிடப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் (1951) 8ஆவது பிரிவின் உட்பிரிவுகள் […]