தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ சென்னை தலைமைச்‌ செயலகத்தில்‌ செங்கல்பட்டு மாவட்டம்‌ தாம்பரம்‌ மாநகராட்சிக்குட்பட்ட, கிழக்கு தாம்பரம்‌, சேலையூர்‌ பகுதியில்‌ மூலதன மானிய நிதி 2021-2022 கீழ்‌ ரூ.2.50 கோடி மதிப்பீட்டில்‌ கட்டப்பட்ட நூலகம்‌ மற்றும்‌ அறிவுசார்‌ மையத்தை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள்

அதனைத் தொடர்ந்து மாநகராட்சி ஆணையாளர்‌ அழகுமீனா, தலைமையில்‌ நூலகம்‌ மற்றும்‌ அறிவுசார்‌ மையத்தை தாம்பரம்‌ சட்டமன்ற உறுப்பினர்‌ எஸ்‌.ஆர்‌.ராஜா‌, மாநகராட்சி மேயர்‌ வசந்தகுமாரி கமலகண்ணன்‌‌, துணை மேயர்‌ கோ.காமராஜ்‌ ஆகியோர்‌ பார்வையிட்டார்கள்‌. இந்நிகழ்ச்சியில்‌ மண்டலக்குழு தலைவர்கள்‌சு.இந்திரன்‌, திரு.து.காமராஜ்‌, ச.ஜெயபிரதீப்‌, மாமன்ற உறுப்பினர்கள்‌, அரசு அலுவலர்கள்‌ உட்பட பலர்‌ உள்ளனர்‌.

தளபதி விஜய் நூலகம் தாம்பரத்தில் திறப்பு

தாம்பரம், பல்லாவரத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தளபதி விஜய் நூலகம் திட்டத்தினை பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் துவங்கி வைத்தார். விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ‘விஜய் விலையில்லா மருந்தகம்’, ‘விஜய் விழியகம்’, ‘விஜய் பயிலரங்கம்’ உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் புத்தக வாசிப்பு திறன் மற்றும் பொது அறிவு சிந்தனை வளர்க்கும் நோக்கில் ‘தளபதி விஜய் நூலகம்’ திட்டத்தினை இன்று விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பல்வேறு இடங்களில் […]

மு.க.ஸ்டாலின்‌ தன்னை சந்திக்க வருபவர்கள்‌ அளித்த புத்தகங்களில்‌ 1500 புத்தகங்களை தமிழ்நாட்டில்‌ உள்ள சிறை நூலகங்களுக்கு தலைமைச்‌ செயலகத்தில்‌ நடைபெற்ற நிகழ்ச்சியில்‌ நன்கொடையாக வழங்கினார்

இந்நிகழ்ச்சியில்‌, சட்டத்துறை அமைச்சர்‌ எஸ்‌. இரகுபதி, உள்‌, மதுவிலக்கு மற்றும்‌ ஆயத்தீர்வைத்‌ துறை முதன்மைச்‌ செயலாளர்‌ பெ.அமுதா, சிறைகள்‌ மற்றும்‌ சீர்திருத்தப்‌ பணிகள்‌ துறை துணைத்‌ தலைவர்‌ ஆர்‌.கனகராஜ்‌ ஆகியோர்‌ கலந்து கொண்டனர்‌.

உலகத்தரத்தில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட கலைஞர் நூலகம் திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்.

மதுரை: சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பழம்பெருமை மிக்க மாமதுரையின் புதிய மணிமகுடமாக உலகத்தரத்தில் அமைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழகத்தின் ஆளுமை மிக்க தலைவரான மறைந்த முத்தமிழறிஞர் கலைஞர், இந்தியாவில் அனைத்து அரசியல் தலைவர்களாலும் சிறந்த ராஜதந்திரி என போற்றப்பட்டவர். நவீன தமிழகத்தை உருவாக்கிய சிற்பி. எழுத்து, பேச்சு, இலக்கியம் என பல்வேறு துறைகளில் தனக்கு நிகர் தானே என ஒளி வீசியவர். இத்தகைய சிறப்பு வாய்ந்த தலைவரின் பெருமையை […]