நீட் வினாத் தாள் ரூ.32 லட்சத்துக்கு விற்பனை: பிஹார் மாணவர் வாக்குமூலம்

பாட்னா: நீட் வினாத் தாள் ரூ.32 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது என்று பிஹார் மாணவர் அனுராக் யாதவ்போலீஸில் வாக்குமூலம் அளித்துள்ளார். எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே 5-ம் தேதி நடைபெற்றது. அதற்கு ஒருநாள் முன்னதாக மே 4-ம் தேதி பிஹார் தலைநகர் பாட்னாவில் உள்ள ஒரு விடுதிக்கு சுமார் 25 மாணவர்களை, இடைத்தரகர்கள் அழைத்து வந்தனர். அவர்களுக்கு நீட் வினாத்தாள்கள் வழங்கப்பட்டு, விடைகளை மனப்பாடம் செய்ய அறிவுறுத்தப்பட்டனர். […]