ஓணம் பண்டிகை வாழை இலை கட்டு ரூ.5,000

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள காய்கறி சந்தையில் வாழை இலை கடுமையாக விலை உயர்வு. பெரிய வாழை இலை கட்டு ஒன்று ரூ.2,000 முதல் ரூ.5,000 வரை விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி.

சிட்லப்பாக்கத்தில் மரக்கிளைகளை அரைக்கும் இயந்திரம்

தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 3 சிட்லபாக்கம் வார்டு 43ல் பகுதியில் மண்டல குழு தலைவர் ஜெயப்பிரதீப் சந்திரன் மற்றும் மாமன்ற உறுப்பினர் சி.ஜெகன் ஆகியோரின் சொந்த முயற்சியில் முதல் முறையாக மரக்கிளைகளை அரைக்கும் இயந்திரம் கொண்டு வரப்பட்டது. வார்டு முழுவதும் மின் கம்பிகளில் உரசி கொண்டிருந்த மற்றும் சாலைகளை மறைத்துக் கொண்டிருந்த மரக்கிளைகளை அகற்றி ஆங்காங்கே போடப்பட்டிருந்ததை ஓர் இடத்தில் ஒருங்கிணைத்து அனைத்தையும் அரைத்து உரமாக்குவதற்கு ஏற்பாடு தொடங்கப்பட்டு நடந்து கொண்டிருக்கின்றது.இவ்வாறான மரக்கிளைகளை பெரும்பாலான சூழ்நிலையில் அப்படியே […]