மராத்தி, வங்க மொழி உட்பட மேலும் 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து. மத்திய அரசு அறிவிப்பு!

மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மராத்தி, பாலி, பிராகிருதம், அசாமி மற்றும் வங்க மொழி ஆகிய மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உறுதி செய்துள்ளார். இந்தியா பல்வேறு மொழிகளைக் கொண்டது. ஒவ்வொரு மாநிலத்திலும் மக்கள் ஒவ்வொரு மொழிகளைப் பேசி வருகிறார்கள். இந்த மொழிகளைக் காக்க மத்திய அரசு தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இப்போது கூடுதலாக 5 இந்திய மொழிகளுக்குச் செம்மொழி அந்தஸ்து […]
மாணவர்களுக்கு தெரிந்த மொழியில் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்: சித்தராமையா

மத்திய அரசு வேலைகளுக்கான போட்டித் தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் நடத்தப்படுகிறது. இதனால் இந்தி அல்லாத மொழியை, தாய்மொழியாகக் கொண்டு படிக்கும் மாநிலங்களின் மாணவர்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுகிறார்கள்.இந்தியில் தேர்வு நடத்தப்படுவதால், வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிக அளவில் தேர்வு செய்யப்படுவதாக தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலத் தலைவர்கள், மத்திய அரசை கண்டித்து வருகிறார்கள்.இந்த நிலையில் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, இன்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறும்போது, குழந்தைகளுக்கு (மாணவ- […]