புறம்போக்கு நிலங்களை மக்கள் நல திட்டங்களுக்காக பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது

கால்நடை மேய்ச்சலுக்காக ஒதுக்கப்பட்ட மெய்க்கால், மந்தைவெளி புறம்போக்கு நிலங்களில் அரசின் 97 நலத் திட்டங்களுக்காக பயன்படுத்திக் கொள்ளலாம். சிப்காட் தொழில் பூங்கா, ஐடி பூங்கா உள்ளிட்டவற்றுக்கு நிலம் ஒதுக்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. கால்நடை மேய்ச்சலுக்காக ஒதுக்கிய புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்யவோ, பட்டா மாறுதல் செய்யவோ தடை விதிக்க கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
நடிகை கௌதமி அளித்த நில மோசடி புகாரில் முக்கிய நபராக தேடப்பட்டு வந்த அழகப்பன், அவரது மனைவி நாச்சியம்மாள், சதீஷ் குமார் உட்பட 6 பேரை கேரளாவின் திருச்சூரில் வைத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்!

டிரான்ஸிட் வாரண்ட் பெற்று கேரளாவில் இருந்து சென்னைக்கு அழைத்து வரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்!
திருப்பத்தூர்: வேறு ஒருவருக்கு விற்ற 21 ஏக்கர் நிலத்தை போலி ஆவணம் தயாரித்து விற்பனை செய்த 21 ஏக்கர் நிலத்தை மகள் பெயரில் போலி பத்திரப்பதிவு: மின்வாரிய பெண் அதிகாரி கணவருடன் கைது
திருப்பத்தூர்: வேறு ஒருவருக்கு விற்ற 21 ஏக்கர் நிலத்தை போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்த வழக்கில் மின்வாரிய பெண் அதிகாரி மற்றும் அவரது கணவரை போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் அடுத்த பேராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் துரைசெல்வராஜ் (60). இவரது மனைவி மனகாந்தி (50). இவர் பேராம்பட்டு மின்வாரிய மேற்பார்வை வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். தம்பதிக்கு சொந்தமான 21 ஏக்கர் நிலம் இருந்தது. இதனை துரைசெல்வராஜ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பத்மநாபன், சக்திவேல், […]
பொது சொத்துகள் ஆக்கிரமிப்பு – கிரிமினல் வழக்கு

அரசின் பொது சொத்துகளை ஆக்கிரமிப்பவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிய வேண்டும் ஆக்கிரமிப்பை அகற்றாத அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு அதிகாரிகளின் உதவியுடன் பேராசைக்காரர்கள் அரசு நிலங்களை ஆக்கிரமிப்பது அதிகரிக்கிறது – நீதிபதி வேதனை
ஆலந்தூர் அருகே 500 கோடி அரசு நிலம் மீட்பு

சென்னை ஆலந்தூர் அடுத்த பட்ரோட்டில் 500 கோடி மதிப்பிலான 1.5 ஏக்கர், இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து சிலர் வீடு கட்டி பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் இந்த இடம் போலி ஆவணங்கள் மூலம் கைப்பற்றியதாக தெரியவந்ததன் பேரில் செங்கல்பட்டு ஆட்சியர் ராகுல்நாத் உத்தரவின் பேரில், பல்லாவரம் தாசில்தார் ஆறுமுகம் தலைமையில் இன்று இடிக்கும் பணி துவங்கியது. வீட்டில் இருந்தவர்கள் அப்புறப்படுத்தபட்டு, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இடம் மீட்கப்பட்டது. இதே போல் இதற்கு அருகில் எஸ்.பி.ஐ.வங்கி, வணிக நிறுவனங்கள் செயல்பட்டு […]
ஓ.எஸ்.ஆர்., நிலங்களை மாற்றக்கூடாது: நகராட்சி நிர்வாகத்துறை உத்தரவு –

சென்னை: குடியிருப்பு திட்டங்களில், ஓ.எஸ்.ஆர்., எனப்படும், திறந்தவெளி ஒதுக்கீட்டு நிலங்களை, வேறு திட்டங்களுக்கு மாற்றும் முன்மொழிவுகளை அனுப்ப, நகராட்சி, மாநகராட்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் தனியாரால், குடியிருப்பு மற்றும் வணிக பயன்பாட்டுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இத்திட்டங்களுக்கான நிலத்தில், 10 சதவீத பகுதி திறந்தவெளி ஒதுக்கீடாக இருக்க வேண்டும் என்பது விதிமுறை. இதன்படி, 1.07 லட்சம் சதுர அடிக்கு மேற்பட்ட திட்டங்களில், 10 சதவீத நிலங்களை, உள்ளாட்சிகளிடம் ஒப்படைப்பது கட்டாயம். அந்த நிலங்களை உள்ளாட்சி அமைப்புகள், […]
கத்திப்பாரா அருகே ரூ 800 கோடி அரசு நிலம் மீட்பு

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், புனித தோமையார் மலை கிராமத்தில் சுமார் 40 ஆண்டுகளாக குத்தகை என ஆக்கிரமித்து வணிக நோக்கத்தில் பயன்படுத்திய நபர்கள் சர்வே என் 480ல் டோமிக் சேவியர் என்பவர் பெயரில் 3196 ச.அடி, சர்வே எண்.458ல் ஹேமலதா என்பவர் 29,450 ச.அடி, சர்வே எண்1352ல் நிசாருதீன் என்பவர் பெயரில் 32,500 ச.அடி என மொத்தம்65,156 ச.அடி ஆகும், என இப்பகுதியில் அரசு நில மதிப்பு ஒரு ச.அடி 10 ஆயிரம் என்கிற நிலையில் […]
நிறுவனத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் அறுவடையை முடித்து நிலத்தை ஒப்படைக்க வேண்டும்

புதிதாக பயிர்கள் ஏதும் பயிரிடக் கூடாது; மீறினால், சட்ட நடவடிக்கைகள் எடுக்கலாம் ₹25 லட்சம் இழப்பீடு என்பது 2014க்கு பிறகு கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு மட்டுமே வழங்க முடியும்; அதற்கு முன்பாக நிலத்தை கொடுத்தவர்களுக்கு வழங்க முடியாது. தொழில் மற்றும் உட்கட்டமைப்பு வளர்ச்சி தொடர்பான விவகாரங்களில் அரசின் கொள்கை முடிவுகளில் நில உரிமையாளர்கள் தலையிட முடியாது.
என்எல்சி நிலம் எடுப்பு: நீதிபதி வேதனை

நெய்வேலியில் 20 ஆண்டுகளாக நிலத்தை சுவாதீனம் எடுக்காத நீங்கள், பயிரை அறுவடை செய்யும் வரை 2 மாதங்கள் காத்திருக்க முடியாதா? பயிரிடப்பட்ட நிலத்தில் புல்டோசர்கைளை விட்டு கால்வாய் தோண்டியதை பார்க்கும் போது எனக்கு அழுகை வந்துவிட்டது. வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் எனக் கூறிய வள்ளலார் பிறந்த ஊருக்கு அருகிலேயே பயிர்கள் அழிக்கப்படுவதை காண முடியவில்லை. நிலத்தை எடுப்பதற்கு ஆயிரம் காரணங்கள் சொன்னாலும் பயிர்கள் அழிக்கப்படுவதை ஏற்க முடியாது.
நிலம், வீடு உள்பட சொத்துக்களின் விலை உயர்கிறது… அமலானது பதிவுத்துறை சேவைக் கட்டண உயர்வு..!
தமிழ்நாட்டில் பத்திரப்பதிவுத் துறையில் ஆவணப் பதிவு, முத்திரைத் தீர்வை, பொது அதிகார ஆவணப் பதிவு உள்ளிட்டவற்றுக்கான சேவைக் கட்டணங்கள் பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன. இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. பத்திரப் பதிவுத் துறை சேவைக் கட்டணங்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆவணப் பதிவு, பதிவு செய்யப்படும் ஆவணத்தைப் பாதுகாத்தல், மின்னணு வாயிலாக ஆவண நகல் வழங்குதல் உள்ளிட்ட சேவைகளுக்கான கட்டணங்களை மாற்றியமைக்க முடிவு […]