ஏரியை காப்போம்

தாம்பரம் மாநகரம், சிட்லபாக்கத்தில், (02/10/2023) காலை, Save Lakes (ஏரியை காப்போம்) சார்பில் பொது மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்ற விழிப்புணர்வு நடைபயணத்தை, தாம்பரம் மாநகர செயலாளர் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் S.R..ராஜா ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். இந்நிகழ்வில், Chitlapakkam Rising நிர்வாகிகள், இ.மனோகரன், சி.சுரேஷ், இரா.விஜயகுமார், மலர்.மு.கருணா, சி.ஜெகன், இ.வி.சுரேஷ், மு.பாரதிதாசன், செம்பாக்கம் கோகுல், பா.பிரதாப், R.K.புரம் சிவா, ச.ஜெகனாதன், துரை.இரா.சிவகுமார், சிட்லபாக்கம் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

சென்னை குடிநீர் ஏரிகளில் 63% நீர் இருப்பு

சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 63% நீர் இருப்பு உள்ளது 5 முக்கிய ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.757 டிஎம்சியில் தற்போது 7.407 டிஎம்சி நீர் உள்ளது

கொடைக்கானலில் உள்ள பேரிஜம் வனப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை

கொடைக்கானலில் உள்ள பேரிஜம் வனப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பேரிஜம் வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் உள்ளதால் சுற்றுலா பயணிகள் செல்ல இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது.

முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!

3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 1931 மில்லியன் கன அடியாக உள்ளது; 159 கன அடி நீர் வெளியேற்றம்! 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீரிருப்பு 112 மில்லியன் கன அடியாக உள்ளது; 20 கன அடி நீர் வெளியேற்றம்! 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியின் நீரிருப்பு 347 மில்லியன் கன அடியாக உள்ளது; 11 […]

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்‌ தலைவர் ஆ.ர.ராகுல்‌ நாத்‌ நன்மங்கலம்‌ ஏரி ஆய்வு

செங்கல்பட்டு மாவட்டம்‌, கீழ்க்கட்டளை ஏரியையொட்டி, நன்மங்கலம்‌ ஏரி கிணறுகளில்‌ முறைகேடாக தண்ணீர் எடுக்கப்பட்டு சுற்றுப்புறங்களில்‌ உள்ள குடியிருப்புகளுக்கு லாரிகள்‌ மூலம்‌ தண்ணீர் விநியோகம்‌ செய்யப்பட்டு வருவதை தடுக்க, அப்பகுதியை ஆய்வு செய்து முறையற்ற போர்வெல்‌ தொடர்புகளையும்‌ மற்றும்‌ மின்‌ இணைப்புகளையும்‌ துண்டிக்குமாறு மாவட்ட ஆட்சித்‌ தலைவர் ஆ.ர.ராகுல்‌ நாத்‌ உத்தரவிட்டார்‌. உடன்‌ தாம்பரம்‌ மாநகராட்சி ஆணையர்‌ அழகுமீனா, தாம்பரம்‌ காவல்‌ துணை ஆணையாளர்‌ பவன்‌ குமார்‌ ரெட்டி மற்றும்‌ அரசு அதிகாரிகள்‌ உள்ளனர்‌.