காஞ்சிபுரம் மாவட்டம் நடுவீரப்பட்டு ஏரி உடைக்கப்பட்டதை அடுத்து அந்த ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள எட்டியாபுரம், குறிஞ்சி நகர், எம்ஜிஆர் நகர் பகுதியில் மின்சாரத்தை துண்டிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு
ஏரியை உடைத்தவர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்
குன்றத்தூர் அருகே ஏரி உடைப்பு

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டம், நடுவீரப்பட்டு ஊராட்சியில்5000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த ஊராட்சியில் வசிக்கின்றனர். ஊராட்சியில் பொதுப்பணிக்கு துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. இது 200 ஏக்கர் பரப்பளவுள்ள மிகப்பெரிய ஏரி ஆகும். இந்த ஏரியின் கரையை நள்ளிரவில் மர்ம நபர்கள் வெட்டியுள்ளார்.இதனால் ஏரியின் கரை உடைப்பு ஏற்பட்டு வயல்வெளி வழியாககுடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சுமார் 20 அடி அகலத்திற்கு ஏரி உடைப்பு […]
சென்னை குடிநீர் ஏரிகளில் சராசரி நீர் இருப்பு – 92.11%
5 முக்கிய ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.757 டிஎம்சியில், தற்போது 10.830 டிஎம்சி நீர்இருப்பு உள்ளது! ▹ செம்பரம்பாக்கம் – 94%▹ புழல் – 92.54%▹ பூண்டி – 91.8%▹ சோழவரம் – 81.78%▹ கண்ணன்கோட்டை – 100%
புழல் ஏரி பாதுகாப்பாக உள்ளது ! மக்கள் எந்த விதத்திலும் பதற்றம் அடைய தேவையில்லை !!!
செம்பரம்பாக்கம் ஏரி – நீர் திறப்பு குறைப்பு

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு 402 கன அடியாக குறைப்பு 4,000 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில், இன்று 402 கன அடியாக குறைப்பு மழை, நீர் வரத்து குறைவு – நீர்மட்டம் 22 அடிக்கும் கீழ் சென்றதால் நீர் திறப்பு குறைப்பு
முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்

புழல் ஏரியில் இருந்து 2வது நாளாக 2000 கனஅடி உபரிநீர் வெளியேற்றம். நீர்இருப்பு 3006 மில்லியன் கனஅடியாக உள்ளது. நீர்வரத்து 985 கனஅடியாக அதிகரிப்பு. சென்னை குடிநீருக்காக 159 கனஅடி நீர் வெளியேற்றம். சோழவரம் ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு வெளியேற்றப்படும் உபரிநீர் 350 கனஅடியில் இருந்து 600 கனஅடியாக அதிகரிப்பு. நீர்இருப்பு 816 மில்லியன் கனஅடியாக உள்ளது. நீர்வரத்து 242 கனஅடியாக சரிவு. கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 470 மில்லியன் கனஅடியாக உள்ளது.
முடிச்சூர் ஏரி நிரைந்து கலங்கல் வழியாக வெளியேறும் நீர், அழகிய காட்சியை மனிதர்கள் போல் ரசிக்கும் மாடும் கன்றும்

தாம்பரம் அடுத்த முடிச்சூர் ஏரி நிறைந்து கலங்கள் வழியாக நீர் வழிந்து ஓடுகிறது. இதனை பார்பதற்கே அழகாக காட்சி தரும் நிலையில் அந்த கலங்கல் எதிரே நின்ற தாய் பசுமாடும் அதன் கன்றும் நீர் வழியும் கலங்கலை பார்த்து ரசிப்பதை காண முடிந்தது. கன்றுகுட்டி உயரம் இல்லாத நிலையில் அங்கிருந்த மண் மேட்டில் முன்னங்கல்களை வைத்து எட்டிபார்த்து வருகிறது. நீர் வெளியேறும் ஓசையை காதுகொடுத்து ரசித்து பார்த்தன.
கேரளா:ஏரியல் தலைகுப்பற கவிழ்ந்து விழுந்த மிதவை சவாரி.. தொடங்கி வைத்த உடனே நீரில் விழுந்த ஊராட்சி மன்றத் தலைவர், துணைத் தலைவர்..
செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 164 கனஅடியில் இருந்து 532 கனஅடியாக அதிகரித்துள்ளது

நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 3,645 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் இருப்பு 3,170 மில்லியன் கனஅடி, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 25 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. “30 நாட்கள் வரை தங்க இந்தியர்களுக்கு விசா தேவையில்லை” “இந்தியா மட்டுமின்றி சீனா நாட்டவருக்கும் விசா கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளது”- மலேசிய அரசு
மணிமங்கலம் அருகே ஏரியில் பெயிண்டர் பிணம் கொலையா? போலீஸ் விசாரணை

தாம்பரம் அடுத்த மணிமங்கலம் பகுதியில் உள்ள பெரிய ஏரியிலிருந்து கரசங்கால் பகுதி வழியாக அடையாறு ஆற்றுக்கு செல்லும் உபரிநீர் கால்வாயில் காயங்களுடன் ஆண் சடலம் கிடப்பதாக அப்பகுதியினர் 108 ஆம்புலன்ஸ்க்கும்,மணிமங்கலம் போலீசாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின் பேரில் நிகழ்வு இடத்திற்கு வந்த போலீசார் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உதவியோடு கால்வாயில் கிடந்த நபரை பரிசோதனை செய்தனர். இதில் தலை, மற்றும் உடலில் ரத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. பின்னர் சடலத்தை கைப்பற்றி குரோம்பேட்டை […]