50 அடி உயர பேனர் ஏரிக்குள் உடைந்து விழுந்தது
பல்லாவரம் வேல்ஸ் சிக்னல் அருகே புத்தேரியை ஒட்டி, பொருத்தப்பட்டிருந்த 50 அடி உயரம் கொண்ட ராட்சத பேனர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பலத்த காற்றுடன் மழை பெய்தபோது பாதியாக உடைந்து ஏரிக்குள் விழுந்துள்ளது. இதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. அதேநேரத்தில் வெளியிலும் தெரியவில்லை. ஆனால் உடைந்து விழுந்த பேனர் காற்றில் பறந்து வாகன போக்குவரத்து நிறைந்த ரேடி யல் சாலையில் விழுந்து இருந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும் என வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.
கீழ்கட்டளை ஏரியில் ஆக்கிரமிப்பு

கீழ்கட்டளை ஏரியில் வடக்கு பகுதியில் ஆக்கிரமிப்புகள் இருந்து வருகின்றன .ஒரு சிலர் தங்களுக்கு சொந்தமான இடம் என்று கூறி அதில் சுவர் கட்டி இருந்தனர் .அதனை அரசு அகற்றினாலும் முழுவதுமாக சுவரின் அஸ்திவாரம் உள்பட முழுவதும் அகற்றப்படாததால் சில நாட்களுக்கு முன்பு மீண்டும் அந்த பகுதியில் சுவர் கட்ட தொடங்கினர்.இந்த ஏரியை தூர்வாரி சீரமைக்கும் பணி தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இந்த நிறுவனத்தினர் ஆக்கிரமிப்பு அகற்ற முயற்சிக்கும் போது அந்த பகுதியைச் சேர்ந்த சிலர் தடுத்து […]
தாம்பரம் ஏரிகளில் கழிவு நீர் அதிமுக குற்றச்சாட்டு

தாம்பரம் ஏரிகள் கழிவு நீர் ஏரிகளாக மாறி உள்ளன என்று அதிமுக குற்றம் சாட்டியுள்ளது. மின் கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்து தாம்பரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாம்பரம் சண்முகம் சாலையில் நடந்த போராட்டத்திற்குமாவட்ட அதிமுக செயலாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். திமுக அரசை கண்டிக்கும் வகையில் கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு பொதுமக்களும் அதிமுகவினரும் கண்டனம் முழக்கங்களை எழுப்பினர்கள். பகுதி செயலாளர் எல்லார் செழியன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் டி கே எம் […]
பள்ளிக்கரணையில் ஏரியில் பாய்ந்த கார் உள்ளே இருந்த காவலாளி உயிரிழப்பு

பள்ளிக்கரணையில் கட்டுபாட்டை இழந்த கார் ஏரியில் பாய்ந்து முழுகியது. காரில் இருந்த தனியார் ஐ.டி நிறுவன பாதுகாவலர் உயிரிழப்பு. ஓட்டுனர் தப்பி கரை சேர்ந்தார் சென்னை அடுத்த சிறுச்சேரியில் உள்ள தனியார் ஐ.டி நிறுவனத்தில் ஒப்பந்த முறையில் கார் ஓட்டுனராக பணி செய்பவர் ராஜசேகர்(33), அதே ஐ.டி நிறுவனத்தில் இரவு பாதுகாவலராக பணி செய்பவர் பீஹார் மாநிலத்தை சேர்ந்த கெளஷல்குமார்(27), வழக்கம் போல் இரவு பணி முடித்த ஐ.டி ஊழியர்களை பாதுகாவலர் கெளஷல்குமார் பாதுகாப்புடன் ஓட்டுனர் ராஜசேகர் […]
தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா கோரிக்கை வைத்ததன் பேரில், 16 கோடி ரூபாய் அரசு நிதியில் செம்பாக்கம் ஏரியின் தூய்மைபணி மற்றும் 8 எம் எல் டி அளவிற்கு சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டு உள்ளது

இதனையொட்டி சி.எம்.டி.ஏ உறுப்பினர் செயலாளர் அதுல் மிஷ்ரா , வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை செயலாளர் உஷா காகர்லா , தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர் அழகு மீனா மற்றும் அதிகாரிகள், நேரில் வந்து செம்பாக்கம் மற்றும் சிட்லபாக்கம் ஏரியின் புனரமைப்பு பணிகளை ஆய்வு மேற்கொண்டனர். இந்நிகழ்வின்போது 43வது மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன், குடியிருப்போர் நலச்சங்க ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன், ஸ்ரீ சர்வமங்களா நகர் சங்க நிர்வாகிகள், சிட்லபாக்கம் ரெய்சிங் உட்பட பலர் கலந்து கொண்டதில் […]
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சிக்குப்பட்ட சிட்லபாக்கம் ஏரியினை

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, மற்றும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். இந்த ஆய்வின் போது தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர் ஆர்.அழகுமீனா மாநகராட்சி அலுவலர்கள், நீர்வளத்துறைஅலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 57% அளவுக்கு நீர் இருப்பு உள்ளதால் கோடை காலத்தில் நீர் தட்டுப்பாடு ஏற்படாது என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது

சென்னை மாநகரின் குடிநீர் ஆதாரங்களான செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 6,702 மில்லியன் கனஅடி அளவுக்கு நீர் இருப்பு உள்ளது. இது ஏரிகளின் மொத்த கொள்ளளவில் 57% ஆகும். சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ஒரு மாதத்துக்கு குறைந்தபட்சம் ஒரு டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படுகிறது. தற்போது 5 ஏரிகளில் மொத்தமாக 7 டி.எம்.சி. குடிநீர் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இது தவிர நெம்மேலி மற்றும் மீஞ்சூரில் செயல்பட்டு வரும் கடல்நீரை […]
சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!

3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 2786 மில்லியன் கன அடியாக உள்ளது! 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீரிருப்பு 253 மில்லியன் கன அடியாக உள்ளது! 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியின் நீரிருப்பு 448 மில்லியன் கன அடியாக உள்ளது!
கௌரிவாக்கம் குளம் ரூ 64 லட்சத்தில் சீரமைப்பு

தாம்பரம் அடுத்த கெளரிவாக்கத்தில் 64 லட்சத்தில் குளம் சீரமைப்பு பணியை எம்.எல்.ஏ எஸ்.ஆர்.ராஜா துவக்கிவைத்தார். மண்டலகுழு தலைவர்கள் ஜெயபீரதிப் சந்திரன், இந்திரன் ஆகிய இருவருக்கும் இன்று பிறந்தநாள் என்பதால் இனிப்புகளை பரிமாறி கொண்டனர். தாம்பரம் மாநகராட்சி 3 வது மண்டலத்திற்குட்பட்ட கெளரிவாக்கம் குளக்கரை குளம் கரைகள் இல்லாமல் முழுவதும் சிதிலமடைந்து கழிவுநீர் குட்டையாக காட்சியளித்தது. இதனையடுத்து 3 மண்டலம் சார்பில் அம்ருத் திட்டம் 64 கோடியில் ஆழப்படுத்தி, கரைகள் பலப்படுத்தி 215 மீட்டர் நடைபாதைகளுடன் சீரமைக்க முடிவு […]
மாடம்பாக்கம் ஏரியில் மூழ்கிய 2பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் ஏ.எல்.எஸ் நகர் அருகே மாடம்பாக்கம் ஏரியில் முழுகிய மாநகராட்சி பள்ளி 6ம் வகுப்பு மாணவன் சந்திரஸ்(12), ஒன்றாம் வகுப்பு மாணவன் தர்ஷன்(6) அகிய இருவர் உயிரிழப்பு, உடல்களை மீட்ட அக்கம் பக்கத்தினர் அருகில் உள்ள பாரத் மெடிக்கல் கல்லூரியில் கொண்டு சென்ற நிலையில் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தகவல், சேலையூர் போலீசார் பிரேதங்களை கைப்பற்றி விசாரணை..