முதல் நாள் வசூலில் லியோ சாதனையை முறியடித்த கூலி
தமிழ் படங்களில் விஜய் நடிப்பில் வெளியான ‘லியோ’ படம் முதல் நாளில் ரூ.148 கோடி வசூல் செய்தது. அதுவே தமிழ் படங்களில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையையும் படைத்தது. தற்போது அந்தச் சாதனையை முறியடித்திருக்கிறது ‘கூலி’. முதல் நாளில் ரூ.151 கோடி வசூல் செய்திருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.
கூலி திரைப்படக் குழுவுக்கு ஸ்டாலின் வாழ்த்து.
நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் இன்று தமிழ்நாடு உள்பட உலகம் முழுவதும் வெளியாகிறது காலையிலிருந்து ரசிகர்கள் தியேட்டரில் குவிந்து கிடந்தனர் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள் ஏற்கனவே நேற்று இரவு முதலமைச்சர் ஸ்டாலின் கூலி படத்தை சிறப்பு காட்சியில் பார்த்தார். அப்போது கூலி படக்குழுவினரை அழைத்து பாராட்டினார் உதயநிதி ஸ்டாலினும் படம் சூப்பரா க உள்ளது என்று பாராட்டியுள்ளார்